வெள்ளி மலரே சிந்து

பூப்பெய்திய காலத்தில் இருந்தே
காதலித்தாயே பூப்பந்தை...
சிந்து உன் பூ கரங்களால்
ஏந்தினாயே பூ மட்டை...
இன்று காதலன் உனக்கு
முத்தமிட்டானே வெள்ளி
பதக்கத்தை கழுத்தில் இட்டு...
பாரதி கண்ட பெண் நீதானோ
வெள்ளையளை கிறங்கடிக்க
வைத்தாயே முதல் சுற்றில்...
பூப்பந்தாட்ட தாரகையே
தரணி திரும்பி பார்க்க
வைத்தாயே...
கேள் உன் காதலனை
என் கழுத்தில் தங்க பதக்கம்
இட்டு தரணி வாழ்த்த செய்வது
எப்போது என்று...
பூப்பந்தாட்ட ரசிகன் நான்
சிந்து இன்று
உன் ரசிகன் ஆனேன்...
நாலு வருஷம் ஒரு முறை
பூக்கும் ஒலிம்பிக்கில் பூத்ததே
உனக்குள் வெள்ளி எனும் பூ...
சிந்து நீ தோல்வி கண்டு
அடைந்தாய் வெள்ளி பதக்கத்தை...
ஆனால் தங்க பதக்கமாய்
மக்கள் நெஞ்சில் மிளிர்ந்தாயே...
வளம் வருகிறாய் பூப்பந்தாட்ட
உலகின் இளவரசியாய்...