எங்கே உண்மை சுதந்திரம்

...''" எங்கே உண்மை சுதந்திரம் ""...

சூரியக் கதிரொளியை
மேகமது மறைத்தாற்போல்
தியாகத்தை திசைமாற்றி
திருத்தங்கள் பலகூட்டி
தின்பண்டம் தான்வழங்கி ,,,

கூண்டுக்குள் குருவியாய்
கூட்டத்தில் குரலெழுப்பும்
அவலத்தின் நிலைமாறி
அன்றாட வாழ்வியலாய்
இந்நாளும் கொண்டாடும் ,,,

நன்னாள் வரும்போதே
தியாகத்தின் மணம்வீசும்
சுகந்தத்தின் சுதந்திரத்தை
நித்தியமும் அனுபவிக்கும்
உண்மையின் திருநாளாய் ,,,

பொய்த் திரையால் மூடிய
மெய்யான சுதந்திரத்தை
உயிர்பெற்று மலர்ந்துவிடும்
அந்நாள் வரும்வரையில்
வாழ்த்துரைக்க காத்திருப்போம் ,,,

என்றும் உங்கள் அன்புடன் ,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்..

எழுதியவர் : அப்துல்ஹமீது(எ)சகூருதீன்.. (23-Aug-16, 9:30 pm)
பார்வை : 975

மேலே