கலியுகம்
உழைப்பாளி எனும் ஏமாளிகளையே
கூர்ந்து கவனிக்கும் கழுகுகளாய்....
பன்னாட்டு நிறுவனங்கள்....!
அறிவாளி எனும் ஏழை எளிய
மாணவ மாணவிகளை...
ஆசைகாட்டி அழைத்து சென்று
அவர்களை அடிமையாக்குவது ஏன்?
மனிதர்களெல்லாம் மிருகங்களாய்...
மாறிக்கொண்டு இருக்கையில்...
எந்த வாய்தாவில் வெளிவரக் கூடும்?
மனித நேயம்...!
எரிந்து கொண்டு இருக்கும்
ஏழைகள் வயிற்றை
எந்த தீயணைப்புத் துறை வந்து
விரைவில் அணைத்து பாதுகாக்கும்?
அரசியல் வாதிகளும் மத வாதிகளும்
ஓநாய்களாய் மாறிக்கொண்டு இருக்கும் போது
மனிதம் எப்படி நிம்மதியாய் வாழும்?