அறியாமை
கடவுளை படைத்த மனிதன் பெரிதா?
மனிதனைப் படைத்த கடவுள் பெரிதா?
சுயபுத்தி இல்லையென்றால்
பயபக்தி என்ன செய்யும்?
சுயமாய் யாருக்கும்
பயம் தோன்றுவதில்லை..!
எவனோ ஒருவன் செய்த சதிதானே
உயர்வும் தாழ்வும்...!
உன்னை நீ அறியும் வரையில்...
புனிதனில்லை...
புதிரானவன் தான் -நீ!
போகும் தூரம் அறியாமல்
நீ கடந்து வந்த பயணத்தில்
ஏதேனும் பயன் உண்டா?
அதில் பெரிதொன்றும் இல்லை..!
கடந்ததை கடப்பதென்பது
உடைந்த கனவுகள்தான்...!
கடந்த காலம் என்பது
இன்னும் பயன்படும் என்றால்
அது உன் அறியாமைதான்...!