தாய் ஒருத்தி

என் சின்ன தாய் ஒருத்தி
அதிகம் பயின்றும்
பயன் பெறாதவளாய்....
இச்சமூகத்திடம் இருந்து
பெற்ற பட்டம் - மலடி...!
என் பெரியம்மாவோ...
ஒன்னுக்கு நான்கு பெற்றும்...
கூனிக் குறுகிதான் இருக்கின்றாள்...
முதியோர் இல்லத்தில் -இன்று...!
தாய் ஒருத்தி இருக்கும் வரையில்தான்
எந்தக் குறையும் எனக்கில்லை...!
அவள் இன்று இல்லாதினால்...
அனாதியாய்...
ஈழத்து அகதியாய்...
இத்தரணியில்.....!