காதல் நுழைவாயில்
பெண்ணே...!
நீயில்லா என் வீடு
கல்லறைதான்...!
காதல் காற்றே....!
நீ வசிக்காத என்னிதயம்
துடிக்குமெனில்....
"விந்தைதான் "
என்னுயிர் இயக்கம்...!
மெளனமாய்...உன்னிதழ்...
சிவப்புக் கம்பளம் விரித்து
என்னை தினம் வரவேற்றாலும்....
காதலுக்கு நுழைவாயில்
கண்கள்தானே...
இல்லையா - என்னழகே?!
இனி நீதானே -என்னுயிரே...!