இனிக்கும் உறவு
காதல் எனும் பல்கலை கழகத்தில் ...
காமம் எனும் தி(சி)றந்த புத்தகம்
இல்லாமல் எப்படி இருக்கும்?
நித்தம் தரும் முத்தத்தில்...
சத்தமில்லா யுத்தத்தில்....
இன்ப வெற்றிவாகை யாருக்கு?
ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்காமல்
எப்படி இனிக்கும் வாழ்வு...?
மனம்விட்டுப் பேசி
அந்த அரங்கத்தில் கூடி
ஊடலோடு கூடிய மனைவிக்கு
உறவாடும் வாழ்க்கைதானே
எந்நாளும் சுகம் தரும்...
காதல் கணவன் மனைவிக்கு!