கருப்பு மீசை களவாட
சிவப்பு நிறமுமில்லை
இளங்கருப்பு சாயலிலே -அவள் முகம்
வெட்கத்தை கலந்து செய்த
புது வண்ணச்சித்திரமே!
நிலவும் வட்டமில்லை
பூமியும் சுற்றவில்லை -அவள்
நின்ற இடம் மலைத்து நிற்கும்
மதி மயக்கும் பெண்மயிலே!
ஓசைஒலி கேட்கவில்லை
மலையருவி பாய்கையிலே
புள்ளிமான் முகர்ந்து செல்லும்
பேசும் மடந்தை சந்தனமே!
மழைமேகம் ஓடவில்லை -நீ
மடிமீது சாய்கையிலே -என்
கருப்பு மீசை களவாட
கண்அயர்ந்த மாமன் சொத்தே!
சித்திரம் சிரிக்கவில்லை
பேதை மனம் கலக்கயிலே
கண்சிமிட்டி பாராயோ
கருத்த மாமன் விழி விசிறும்!
சித்திரையும் மாதமில்லை
வைகாசி வருகையிலே
தேதி வச்சு கைப்பிடிப்பேன்
காந்தவிழி கவிக்குயிலே!
கடலும் ஆழமில்லை
மனக்காதல் பார்கையிலே
தாலிக்கட்டி அளவெடுத்தால்
காதல்மணம் சொர்க்கமடி ...
இங்கனம்,
கருப்பு மீசை : மருதுபாண்டியன். க @2012