என்கண்ணே சொல்லடி

என் கண்ணே
சொல்லடி சொல்லடி.....

உன்நினைவைச்
சுமந்து
கடந்து போகும்
காலம் எல்லாம்
மரணத்தின் எல்லையடி.....

நான் வாங்கும்
சுவாசம்
நீதந்த
நேசம்.....உனைக்காணாத
என் வாழ்வில்
ஏது சந்தோசம்.....??

சத்தியமாய்
சொல்வேன்
சந்தோஷமாய்
நம்மில்
யாருமில்லை......
பிரியமானவளே
உன் நினைவோடு
மட்டுமே
சேர்ந்து
பயணிக்கிறேன்......
எங்கேயோ
கண்டுகொள்வேன்
என்கிற
நம்பிக்கையில்......

எந்தன்
வரிகள்
உந்தன்
கண்களில்
பயணிக்கும்......
என்கிற எண்ணமும்
எப்போதும்
எனக்கு உண்டு......!!

உன்னாலே
அழுகிறேன்......
உன்நினைவில்
சிரிக்கிறேன்.....
உன்னைத்தவிர
இவ்வுலகத்தையே
மறக்கிறேன்......!!

எனக்காக
காத்திருப்பாய்
என்று
நானும் காத்திருக்கிறேன்.....
காதல் மீது
காதல்
கொண்டு......!!

இந்த இளநெஞ்சில்
ஏராளம்
வேதனைகள்.....
நீ அறியாத
பாசமா.....நான்
கொண்டேன்.....
திசைகெட்டு
நின்றேன்.....தீயாய்
என்னை சுட்டு
எரிக்கும் சுவாலையாய்
உன் நினைவலைகள்......!!

காதல் மயக்கத்தில்
வந்ததில்லை
இந்த வரிகள்.....
உன்னைக்காணாத
கலக்கத்தில்
வந்த வேதனையின்
சிதறல்கள்......!!!

எழுதியவர் : thampu (24-Aug-16, 1:30 am)
பார்வை : 138

மேலே