வளர்ந்ததும்
கழுதைக் குட்டி
கன்றில் அழகு,
நாட்கள் சென்றால்
நடப்புத் தெரியும்..
பிள்ளையின் மனது
வெள்ளை மனது,
வளர்ப்பு முறையில்
வருடங்கள் சென்றால்
வந்து சேரும்
நல்லதும் கெட்டதும்..
நல்லதாய் ஆக்குதல்
நமது பொறுப்பு,
தீயதாய் வளர்ந்தால்
யார்தான் பொறுப்பார்...!