மதி மகளே ​

மல்லிகை
மணமுடன்
மந்திரமாய்
மலர்ந்திட்ட
மதி மகளே
மகராசியாய்
மண்ணிலே
மருளின்றி
மனக்கசப்பிலா
மனதோடு
மங்களமாய்
மனையறத்தில்
மனோதிடமும்
மங்காத
மகிழ்ச்சியும்
மறுவீட்டில்
மதிப்புள்ள
மருமகளாய்
மணாளனுடன்
மட்டற்ற
மனநிறைவாய்
மடியிலே
மழலையாய்
மயக்கிடுவாய் ....

----------------------------

​மருளின்றி = அச்சமின்றி
மனையறம் = இல்லறம்


பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (24-Aug-16, 8:40 am)
பார்வை : 156

மேலே