கிராமத்து காதல்

களையெடுக்க
போரியேடி

ஐத்த மக உன்ன காண
ராவும் பகலும்
காத்திருக்கேன்
கண்டுக்காம போய்ராதடி

மல்லிகை
வாங்கியாந்தேன்
உன் தலையில்
வச்சிவிட
நானும் துடிச்சேன்

மரிக்கொழுந்து
மனக்கவில்லையடி
மாமன்
மக
வாசனைக்கு
ஈடேதடி

ஓரப்பார்வை
பாக்குரியேடி
ஒடஞ்சி
நானும்
கெடுக்குரேனடி

காலுக்கு
கொழுசு
போதுமாடி
நானும்
கால்
விரலுக்கு
மிஞ்சி
போட
வேணாமடி

ஆடி மாசம்
போயாச்சடி
நீயும்
ஆளாகி
நாளாச்சிடி

கூரப்பட்டு
கட்டும்
நேரமும் தான்
வந்ததடி
உனக்கு

ரொம்ப தான்
பன்னாதடி
சின்ன புள்ள
ரோசக்காரன் மாமன்
இவன்
தெரியுமுல்ல

நால்ல நாள்
பாத்து
பரிசம் போட
வாரென்
புள்ள

நாமும் ஒன்னா
இனையும்
காலம்
தூரமில்ல.........

எழுதியவர் : கா.திவாகர் (24-Aug-16, 5:53 pm)
Tanglish : kiramaththu kaadhal
பார்வை : 83

மேலே