காதல் கடலில் பூத்த செந்தாமரை

மங்கி மயக்கும் மாலை பொழுதில்
மழை சாரல் வீச
யாரும் இல்லா பூஞ்சோலையில்
நீயும் நானும் .....

மல்லிகை போன்ற - உன்
கண்கள் மையிட்டு காவியம் பேச
ரோஜா போன்ற - உன்
கன்னங்கள் வெட்கத்தில் வெளிர
தேன்போன்ற - உன்
இதழ்கள் மௌனம் பேச
தாலம் பூ வாசனை போன்ற - உன்
கருங்க்கூந்தல் என்னை தீண்ட
அன்னம் போன்ற - உன்
அசைவில்
ஓடை வளைவு போன்ற - உன்
மெல்லிடை அசைய - விடியற்ப்பொழுதில்
புல்லின் மேல் பனி துளி போல் - உன்
பொன்னுடல் மேனியில் - மழைத்துளிகள்
முத்தாக ஒளிர - என்னருகில்
என் காதல் கடலில் - பூத்திருக்கும்
"செந்தாமரை நீ"

எழுதியவர் : M . சரண்யா (24-Aug-16, 7:14 pm)
பார்வை : 96

மேலே