கண்ணாடி

கண்ணாடி தன் முகம் பார்ப்போரை அழகாக காண்பிக்கும்
உண்மையை உரக்கச் சொல்லும்
பொய் உரைக்காது கதை விடாது
நிகழும் காட்சியை அப்படியே அளிக்கும்
மிகையுமில்லை குறையுமில்லை..
மேகம் முகம் பார்க்கும் கண்ணாடியாய் நீரோட்டம்
நிலவு முகம் பார்க்கும் கண்ணாடியாய் ஊர்க்கிணறு
சூரியன் முகம் பார்க்கும் கண்ணாடியாய் உழைப்பாளிவியர்வை
நமது முகம் பார்க்கும் கண்ணாடியாய் நட்புவட்டம்
கண்ணாடி பட்டால் உடலில் ரத்தம் வரும்
கண்ணடி பட்டால் மனதே ரத்தம் சிந்தும்
குழிஆடி குவிஆடி தூரம் பக்கம் காட்டும்
கண்ணாடி என்றவுடன் தேசப்பிதா முகம் நினைவில் வரும்
கண்ணாடி அணிவது சிலருக்கு அழகு
கண்ணாடி அணிவதில் சிலருக்கு வெறுப்பு
கண்ணாடி போல உண்மையை பிரதிபளிப்போம்
அழகிழந்த கண்ணாடியாகாமல் புதுப்பொலிவுடன் வலம்வருவோம்....