நம் வீட்டிற்கு வா
நீ ஒரு இந்தியன் ,
நாம் பெற்ற சுதந்திரம்
ஒன்றும் கழட்டி போட்ட சட்டை கிடையாது....
ஆம்
நம் தாய் நாடு
தாய் தரும்
தந்தை தரும்
கல்வி தரும்
நல்ல நட்பு தரும்
சோதனை தரும்
அதில் சாதனை தரும்...
ஆனால்
உனக்கோ தாயின் மீது அன்பு இல்லை
தாய் நாட்டின் மீதும் அன்பு இல்லை
அவள் மடியில் விழவும் ஆசை இல்லை
அவளை காக்கவும் ஆசை இல்லை.
உனக்கு தேவை எல்லாம்
யாருக்கும் உதவாத அந்நிய நாட்டு பணம்
அது உனக்கும் உதவுவதும் இல்லை
உன் தாய்க்கும் உதவுவதும் இல்லை
உன் தாய் நாட்டுக்கும் உதவுவதும் இல்லை.
இருந்தும் உதவாத பணம்
இருந்தால் என்ன போனால் என்ன
அதுபோல நீயும்
தாய் வயிற்றில் பிறந்து
தாய் நாட்டில் வளர்ந்து
உதவாத நீ
இருந்தால் என்ன இறந்தால் என்ன…!