உணர்ந்தும் உணராத காதல் 555

காதல்...

உண்மை காதலை உணர்த்த சிலர்
குருதியில் கடிதம் எழுதுகிறார்கள்...

சிலரின் கைகளில்
தீ காயம் வைத்துக்கொள்கிறார்கள்...

ஷாஜஹான் காட்டினார் மனைவியின்
மீது கொண்ட காதலுக்கு தாஜ்மஹால்...

தனக்காகத்தான் தாஜ்மஹால்
என்று மும்தாஜ்க்கு தெரியாது...

காதலின் அதிசயம் தாஜ்மஹால்
என்று சொல்லும் பலர்...

உண்மை காதலை
உணர்வதில்லை...

ஆண்களின் உண்மைக்காதல்
பலவடிவங்களில் தெரியும் வெளியில்...

பெண்ணின் உண்மை காதல் அவளின்
மரணத்தில் மட்டுமே தெரியும்...

உணர்ந்த காதல்
சேர்ந்து மண்ணில் வாழும்...

உணராத காதல் சேராமல்
விண்ணில் வாழும்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (25-Aug-16, 7:59 pm)
பார்வை : 125

மேலே