இனிமை தந்திடும் ஞாலம்

வந்திடு என்னை அணைத்திடு-நீ
தந்திடும் சுகத்தினில் பிணைத்திடு
சிந்திடும் புன்னகை முத்து –ஒரு
விலையே இல்லா சொத்து.

கண்ணின் ஒளியாய் இருந்திடு-உன்
கன்னம் தந்து விருந்திடு
விண்ணின் நிலவே வந்திடு –நான்
விரும்பும் யாவையும் தந்திடு.

கட்டிக் கரும்பாய் இனித்திடு –என்
காலம் எல்லாம் கனிந்திடு
சுட்டால் ஒளிரும் தங்கம்-நான்
தொட்டால் சிவந்திடும் அங்கம்.

இன்பமும் துன்பமும் ஒன்றே –என்
அருகினில் இருந்தால் நன்றே
இனியிங்கு கனிந்திடும் காலம்-தனி
இனிமை தந்திடும் ஞாலம்.

எழுதியவர் : பொதிகை மு.செல்வராசன் (25-Aug-16, 10:22 pm)
பார்வை : 82

மேலே