எனக்கும் ஆசைதான்

எனக்கும் ஆசைதான்!!
துள்ளி விளையாடும் அப்புள்ளிமானை பற்றியும்,
எள்ளி நகையாடும் இம்மானுடர் பற்றியும்,
ஊதியம் பெற்றுக்கொண்டு ஊழல் செய்யும் அரசியல்வாதிகளை பற்றியும்,
உழுதுகொண்டிருக்கும் உழவன் பற்றியும்,
உதவி புரிந்துகொண்டிருக்கும் அவ்வெருது பற்றியும்,
காதலின் தூய்மை பற்றியும்,
பெண்மையின் தாய்மை பற்றியும்,
ஆண்மையின் மென்மை பற்றியும்,
நட்பின் புனிதம் பற்றியும்,
அது கொள்ளும் பெருமை பற்றியும்,
இறைவனின் ஓவியமாம் எழில் மிகு இயற்கை பற்றியும்,
கவிதைகள் எழுத..
எனினும், எழுதுகோலை எடுத்து பிடிக்கும் போதெல்லாம்
எதிரில் உன் முகம் முந்தியடித்துக்கொண்டு
உன் நினைவுகளில் மூழ்கடித்து என்னை
தோற்கடித்துவிடுகிறதே!!

எழுதியவர் : நிவேதா (26-Aug-16, 10:36 am)
Tanglish : enakum aasaithaan
பார்வை : 448

மேலே