கவனம் கொள்

இந்தியனின் சராசரி ஆயுள் எழுபது - இந்த
எழுபதற்குள் அவனுக்குள் எத்தனை பழுது
நாழிகை முண்ணூற்றி அறுபத்திஆறும் – ஏதோ
ஒரு நோய் அவனுள் பண்ணுது கோளாறு..!
நடக்கும்போது – கால் வலி
எடுக்கும்போது – கை வலி
நினைக்கும்போது – தலை வலி
பார்க்கும்போது – கண் வலி
நுகரும்போது – மூக்கு வலி
பேசும்போது – வாய் வலி
கடிக்கும்போது – பல் வலி
நக்கும்போது – நாக்கு வலி
விழுங்கும்போது – தொண்டை வலி
உண்ணும்போது – வயிற்று வலி
உட்காரும்போது – இடுப்பு வலி
உதறும்போதுபோது – மூட்டு வலி
சுமக்கும்போது – முதுகு வலி
திட்டு வாங்கும்போது – மனது வலி
உறங்கும்போது - உடல் வலி
களவி புரியும்போது – குறி வலி
கழிக்கும்போது – ஆசன வலி
இப்படியாக ஒவ்வொரு நாளும் நாம்
நமக்குத் தெரியாமலேயே வலிகளை
தாங்கிக் கொண்டே உயிர் வாழ்கிறோம்.

எழுதியவர் : சாய்மாறன் (26-Aug-16, 8:02 pm)
சேர்த்தது : மாறன்மணிமாறன்
Tanglish : kavanam kol
பார்வை : 65

மேலே