உலகத்து பார்வையில் நீ

உருண்டையான உலகத்தை
உருண்டு நான் வந்திருந்தேன்!
உன் போல பேரழகு
உருவத்தில் இல்லையடி!

உலகத்து குயில்களை
ஒன்றாக இசைக்க இட்டேன்!
உன் குரல் இன்னிசைபோல்
அவையெதும் இல்லையடி!

தொட்டால் சுருங்கும்
தொட்டாச் சிவங் கியும்
நீ சிவக்கும் நொடிகளினால்
அதுதோற்று விட்டதடி!

வானவில்லின் வர்ணங்களை
உன் புடவைக்குள் இட்டதனால்
வர்ணம் இழந்த வேதனையில்
உடல்வளைந்தபடி இருக்குதடி!

கண்மணியின் கூந்தலை
காற்று வருட முடியாததால்
எட்டு கோள்கல் உயிரின்றி
தனிமையிலே வாடுதடி!

உன்கண்கள் வெளிச்சமின்றி
இரவில் அழுத பூக்களை
இந்த லோகம் தவறுதலாய்
பனித்துளிகள் என்றதடி!

உலகத்து பார்வையில்
உன்னை அலங்காரப் படுத்த
இந்த கவி போதுமென்றாலும்
இதுஇன்னும் தொடங்குமடி!

எழுதியவர் : (26-Aug-16, 8:01 pm)
சேர்த்தது : Ijaz R Ijas
பார்வை : 77

மேலே