நெஞ்சின் அழுகை
காலம் கரைகிறது
ஞாலம் மாறுகிறது
சமுதாயம் மாறவில்லை
சமூகம் திருந்தவில்லை
மனிதம் தேய்ந்தது
மண்ணும் காய்ந்தது
தலைமுறை தழைக்குது
நடைமுறை தவறாகுது
அரசியல் நஞ்சானது
அரசாங்கம் நத்தையானது
மனித இனம் பாழாகிறது
பாழும் மனம் அழுகிறது....
பழனி குமார்