நான் தான் அது

என்னை எப்போதும்
உன் அருகிலேயே
வைத்திருக்கிறார்

ஆசையோடு
அடிக்கடி தொடுகிறாய்
என்னை எங்கே தொட்டால்
எதைச் சாதிக்கலாம் என்பதையெல்லாம்
தெரிந்து வைத்திருக்கிறாய்

ஏய்....
என்ன முழிக்குறாய்?
நான் தான்
உன்னுடைய
"செல்போன் "

எழுதியவர் : சி.பிருந்தா (26-Aug-16, 8:25 pm)
சேர்த்தது : சிறோஜன் பிருந்தா
Tanglish : naan thaan athu
பார்வை : 192

மேலே