தாய் மடியே என் வாழ்வில் மறக்க முடியா தருணம்

்மார்கழி மாதமது. குளிர் காற்றில் தேகம் சில்லிட வானத்தை பார்த்தேன். வண்ணங்களுடன் போட்டி போட்டுக்கொண்டு காற்றாடிகள் வானை வட்டமிட்டு கொண்டிருந்தன.. 6 வயது சிறுமி என்னுள்ளும் பட்டம் விடும் ஆசை பற்றிக்கொண்டது. அக்கா அம்மாவை கெஞ்சி கொஞ்சி எப்படியோ கட்டிவிட்டேன் பட்டத்தை, ஆனால் வானை தொடுமளவு பறக்க வைக்க தெரியாமல் காற்றாடியை உயர பிடித்து அங்கும் இங்குமாக ஓடி விளையாடிக்கொண்டிருந்தேன். ஆ! தலையில் சம்மட்டியால் அடித்ததை போல் வலிக்க குனிந்து பார்த்தேன், பாதத்தை கிழித்து ரத்தத்தை தன்னுள் பூசிக்கொண்டிருந்தது கண்ணாடி துகள். அம்ம்மா! என்ற கதறலில் ஓடிவந்து என்னை தூக்கிய தாய். ரத்தத்தின் வேகத்தை விட குபு குபு என கண்ணீர் சிந்தினாள். தாய் அழுவதை பார்த்து நான் மேலும் அழ எங்கள் அழுகை சத்தத்தை கேட்டு அப்பா ஓடி வந்தார். ஒரு கணம் செய்வதறியாமல் திகைத்தவர் தாயின் அழுகையை எப்படியோ முடிவுக்கு கொண்டு வந்து என்னை தூக்கிக்கொண்டு வைத்தியசாலைக்கு ஓடினார். 2 தையல்கள் போட்டு வீட்டிற்கு அனுப்பினார் வைத்தியர். வந்த நாள் முதல் இரண்டு மாதமாய் என்னை சுகமாய் சுமந்தாள் என் தாய். இன்று என் மகவை தூக்கி கொஞ்சும் ஒவ்வொரு கணமும் கண்கள் கண்ணீரில் நனையும் என் தாயின் அன்பை எண்ணி........
மீண்டும் சந்திப்போம் இன்னொரு நினைவோடு .....

எழுதியவர் : மாஹிரா (27-Aug-16, 2:56 pm)
சேர்த்தது : மாஹிரா ஜைலப்தீன்
பார்வை : 244

மேலே