கண்ணெதிரே தோன்றினாள் தொடர் கதை - பகுதி 10

விக்னேஷின் தோள்களை ஆதரவாக தொட்ட சுகன், என்ன விக்கி! பவானி பாட்டியை பற்றி ஏதாவது தகவல் கிடைத்ததா? என்று கேட்டான். விசும்பலுக்கு மத்தியில் தன் கையிலிருந்த புகைபடத்தை நீட்டினான் விக்கி .
என்ன விக்கி யாரு இது? பாட்டிமா பக்கத்துல ஒரு பொண்ணு? கண்களை இறுக மூடியவன் புகைப்படத்தின் பின்புறம் காட்டினான். N .பவானி என்றிருந்தது.. அடடே பவானி பாட்டி இல்லையா? இல்லை என்பது போல் தலையாட்டியவன் கண்ணீருக்கு மத்தியில் விக்னேஷ் மெதுவாய் சொன்னான் இது என் நித்தி நம்பர் ...
வாட்? அப்பிடின்னா நித்தியும் பவானியும் ஒருவரா? மைகோட்! பாட்டிமா தான் உன் நம்பர் நித்திக்கு குடுத்திருப்பாங்க! நண்பனின் இறுகிய முகத்தை பார்க்க முடியாமல் விக்கி உன் வாழ்க்கைல விதி ரொம்பவே விளையாடிரிச்சி என்ன தான் செய்ய அறிமுகம் ஆக முன்னமே நித்தி தொலைதூரம் போய்ட்டா. கவலைப்படாதே எங்க கைல ஒன்னும் இல்ல...என்று ஆறுதல் சொன்னான்.
சுகன்.. நான் நித்திய வர சொன்ன அதே கடற்கரைக்கு போகணும். அவள் பாதம் பதிச்ச மண்ல நான் கொஞ்சம் உறங்கணும் என்ன கூட்டிட்டு போவாயா? .ஆமோதிப்பதை போல் சுகன் தலையாட்டினான்.
(நிறைவு பகுதியுடன் உங்களை சந்திக்கிறேன் )
அன்புடன் மாஹிரா