ஒரு தேவதை ஒரு காதல்

மாலை நேரம் வெயிலில் தாகம் எடுக்க குளிர் பானம் குடிக்க தேடி ஓடினான் கவிபாரதி. தொழிற்சாலை ஒன்றில் தலைமை கணக்காய்வாளராக பணியாற்றுகிறான். தான் அணிந்து இருக்கும் முழுக்கை சட்டைக்கு வெப்பம் அதிகரித்து தாகம் எடுத்தது அவனுக்கு. அலுவலகத்தில் இருந்த குளிர் சாதனத்தை அனுபவித்த உடல் வெளியே வெயிலை கண்டவுடன் உஷ்ணத்தில் தவித்தான். சில்லுன்னு எதாவது குடிக்க கடையை தேடினான்.
ஒரு கடை கண்ணுக்கு தெரிந்தது. அங்கே வேக வேகமாக ஓடி பொய் ஒரு கோகோ கோலா வாங்கி பருகினான். அந்த அனல் பறக்கும் வெயில் நேரத்திலும் கூட ஒரு பெண் நடந்து போக, மனம் அவளை ரசிக்க முட்பட்டது. கண்ணோ அவளின் இடையை நோட்டமிட்டது. அந்த கொளுத்தும் வெயிலிலும் ஒரு கணம் தென்றல் அடித்தது போல் இதமாக இருந்தது அவனுக்கு.
அவள் மறையும் வரை பார்த்து கொண்டே இருந்தான். அவள் கண் பார்வையிலிருந்து மறைந்த பிறகுதான் சுய நினைவுக்கு வந்தவனாய் கை கடிகாரத்தை பார்த்தான், மதிய உணவு நேரம் முடிந்தாகி விட்டது. அலுவலகத்துக்கு செல்ல வேண்டும் என்று ஓட்டமும் நடையுமாக போய் சேர்ந்தான் அலுவலகத்துக்கு. மேனேஜர் கவிபாரதியை அழைத்து இன்றுதான் இ-மைலில் ACCOUNT EXECUTIVE பதவிக்காக 2 நாள் கோர்ஸ் ஏற்பாடு செய்து இருக்கிறார்கள். உனக்கு செல்ல விருப்பமா என்றார். அவனும் சற்றும் யோசிக்காமல் சரி சொல்லிவிட்டான். அடுத்த வாரம் செல்ல தயாராகுங்கள் என்றார் மேனேஜர். கவிபாரதி சரி சொல்லிவிட்டு அங்கிருந்து புன்னகை உடனும் சந்தோசமாகவும் சென்றான்.
இதுநாள் வரை எந்த கோர்ஸ் மற்றும் ட்ரைனிங் (TRAINING) எதுக்கும் தன்னை சிபாரிசு செய்ததில்லை. இதுதான் முதல் தடவை நிறுவனத்தை பிரநிதித்து செல்கிறான். இதெல்லாம் அந்த பெயர் தெரியாத தேவதையை பார்க்க நேர்ந்ததினால் ஏற்பட்ட அதிஷ்டம். அவளை மீண்டும் தேடி குளிர் பானம் வாங்கிய கடைக்கு சென்றான். அவள் தென்படுவாளா என்று, தினம் அங்கே சென்று அவள் வருவாளா என்று விழியால் அவளை வழியில் தேடினான். கோஸ்க்கு செல்லும் நாளும் வந்தது. பெயர் தெரியாத தேவதையை பார்க்க முடியவில்லை என்ற மனவருத்தத்துடன் சென்றான்.
அவனுக்கு என்று ஓர் இருக்கை ஒதுக்கப்பட்டு பெயர் பதித்து இருந்தது. இருக்கையிலும் அமர்ந்தான், பக்கத்தில் இருக்கையில் பெண் அமர்ந்து இருப்பது போல் இருக்கின்றடியே என்று முகத்தை பார்த்தான். அவனுள் ரத்த ஓட்டம் பிய்த்து கொண்டு ஓடியது. அவனின் பெயர் தெரியாத தேவதை மிக அருகில். ஹெலோ ஐம் சுமதி என்றால். நான் கவிபாரதி என்றான். அவளும் எந்த ஒரு அச்சம் நாணம் இல்லாமல் வெகு நாட்கள் பழகியதை போல் பேசி பழகினாள். முதல் நாள் பழக்கத்திலே அவள் எங்கு வேலை பார்க்கிறாள் என்றெல்லாம் தெரிந்து கொண்டான். அவள் கணக்கியல் விஷயங்களில் இன்னும் திறனாளியாக இருந்தாள் தேவதை எனும் சுமதி. அவளின் அறிவு, திறமை அழகையும் கண்டு வியப்படைந்தான் கவிபாரதி. நான் தான் அறிவாளி என்றிருந்தான் அவளை பார்க்கும் வரையில். மெல்ல மெல்ல மதி மயங்கி அவள் பின் சென்றது மனது.
அவளும் தன்னுடன் செல்பி எடுத்து கொண்டாள். அவளுக்கும் தன் மேல் காதல் இருக்குமோ என்று சிறு சந்தேகம் எழுந்தது. இருந்தால் அதிஷ்ட சாலிதான் நான் என்று மனதுக்குள் நினைத்தான். இரவில் வாட்சாப்ப் பார்த்தான், அவள் கொடுத்த அலைபேசி என்னை சுமதி என்று தன் அலைபேசியில் பதிவு செய்து கொண்டான். அவளின் வாட்ஸாப்ப்பை பார்த்தான். அவளின் PROFILE PICTURE ரை பார்த்தான். தூக்கி வாரி போட்டது அவனுக்கு. அவனும் சுமதியும் எடுத்து கொண்ட சுயபதிவை PROFILE PICTURE ராக பலர் பார்க்கும் படி போட்டிருந்தாள்.
கோர்ஸ் இன்று இரண்டாவது நாள். இறுதி நாளும் கூட. தேவதையை பிரியும் நாள். இன்று எப்படியாவது தைரியத்தை வரவழைத்து கொண்டு காதலை சொல்லி விட வேண்டும் என்று மனதுக்குள் எண்ணி கொண்டான். கவிபாரதி இன்று இன்னும் சகஜமாக பழகினான் அவளிடம். காதல் சொல்ல கோர்ஸ் முடியும் வரை காத்திருந்தான். கோர்ஸ் முடிந்ததும் அவளிடம் காதல் சொல்ல சுமதி என்று கூப்பிட்டான். அவளின் பின் புறம் மற்றுமொரு குரல் ஹாய் சுமதி என்றது. சுமதியும் திரும்பினாள். ஹாய் என்றாள். அழாகான ஆடவர் புன்னகையுடன் வந்தார். சுமதி அவரிடம் கவிபாரதியை அறிமுகம் செய்து வைத்தாள். எப்படி தெரியுமா? THIS IS கவிபாரதி MY SWEET FREND, AND BARATHI, THIS IS SURESH MY SWEET HUSBAND என்றாள். கணவன் என்று சொன்னதும் கவிபாரதிக்கு உலகமே சுற்றியது. சுமதியும் சரி நான் கிளம்பறேன். BYE என்று சொல்லிவிட்டு கிளம்பினாள்.
கவிபாரதி அதிர்ச்சிலிருந்து மீளவே இல்லை. அவள் என்னோடு இவ்வளவு நெருக்கமா பழகியும் கல்யாணம் ஆன விஷயத்தை சொல்லவில்லையே. அவளிடம் கல்யாணம் ஆன அறிகுறி எதுவும் தெரியவில்லையே. இப்படி பல கேள்விகள் அவனுள். எது எப்படியோ ஒன்னு மட்டும் தெரியுது அடுத்த வருஷம் அம்மாவாக போற பொண்ணுக்காக நான் நாயா அலைஞ்சு இருக்கேன். கவிபாரதி தன்னை தானே சமாதானம் படுத்து கொண்டான்.