ஒரு போராளியின் காதலும் கண்ணீரும் கலந்த சரித்திரம்.... பாகம்-04

ஏனெனில் அவள் அத்தை இப்படி மெதுவாக அன்பாக கதைத்ததே இல்லை.மனதில் சிந்தித்தவாறே சென்றாள். ஊரின் எல்லையைத் தாண்டி சென்றுகொண்டு இருந்தனர்.

நரி ஊளையிடுவது போன்ற சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. வினோவுக்கு மனதில் பயம் எழுந்தது.ஆனால் அவள் அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.

வெகு தூரம் சென்றனர்.அங்கே யாரோ சிலர் கதைத்துக் கொண்டு நின்றனர். இரவு என்பதால் அவளுக்கு யார் என்று தெளிவாக தெரியவில்லை.ஆனால் அவை அனைத்தும் பெண்களின் குரல் என்பதை வினோவால் ஊகிக்க முடிந்தது. அவர்களிடம் சென்று அவள் அத்தை ஏதோ கதைத்தாள்.
அங்கிருந்த யாரோ ஒரு பெண் குரல் கூறியது,
"உங்களுக்காகத்தான் இவ்வளவு நேரமும் காத்திருந்தோம்..." என்று
அவள் அத்தை வினோவை அவர்களின் கையில் ஒப்படைத்து விட்டு அவள் அவர்களிடம் ஏதோ வாங்கி விட்டு திரும்பி பார்க்காமலே சென்று கொண்டு இருந்தாள்.

"அத்தை............. என்னைய விட்டுட்டு எங்க போறீங்க நானும் வாறன் வீட்ட."
என்று கூறி கூப்பிட்டாள் ஒரு முறை. மறுமுறை கூப்பிட முடியல்லை.காரணம் அங்கு நின்ற பெண்களில் சிலர் சத்தமிட வேண்டாம் என கட்டளையிட்டனர். இரவு வேளை என்பதால் அவளுக்கு சரியாக எதுவும் தெரியவில்லை

அவர்கள் நடைப்பயணமாக அழைத்து சென்றனர்.பின்னர் வாகனம் ஒன்று வந்து அனைவரையும் ஏற்றி சென்றது.
பாவம் வினோ ஆசையுடன் வந்தவள் தற்போது தன்னந்தனிமையாக யாரோ சிலருடன் சென்று கொண்டு இருந்தாள். தூக்கத்தில்இருந்த அவள் திடீரென திடுக்கிட்டு எழுந்து தன் தங்கையை நினைத்து அழுதாள். அப்பொழுது....... தொடரும்.........

எழுதியவர் : சி.பிருந்தா (27-Aug-16, 12:13 am)
சேர்த்தது : சிறோஜன் பிருந்தா
பார்வை : 127

மேலே