வயிற்றுப் பிழைப்பு
கால்வயித்துக் கஞ்சிக்காக அந்தரத்தில் பிழைப்பு
கால்தடுக்கி விழுந்துவிட்டால் யாருஇங்கே பொறுப்பு
காலம்பூரா இதுதாங்க எங்கவாழ்க்கை நெலம
இதைப்பார்த்து கண்ணீர் சிந்தாதோ ரசிக்குமுங்கள் உளமே
எங்கள நாங்களே அடிச்சிக்கிட்டா வலியும் காசும் கிடைக்கும்
சின்ன கம்பிக்குள்ள உடலவளைச்சா கைத்தட்டல் கொஞ்சம் கிடைக்கும்
குதிச்சுக் குதிச்சு ஆடிப்பாட வாயப்பொலந்து பாக்கும் கூட்டம்
கைய ஏந்தி முன்ன நின்னா என்ன வேலையப்பாருன்னு நகரும்
இது என்று மாறுமுன்னு உங்களுக்குத்தெரிஞ்சா சொல்லுங்க
இது என்ன வாழ்க்கையின்னு உறக்கம் சரியா இல்லீங்க
இது போல வாழயேனோ மனுசனா பொறப்பு எடுத்தோம்
இது மாறும் காலம் காண இன்னும் காத்துக் கெடக்கோம்
எங்க பொழப்பு நாறப்பொழப்பு வேற என்ன சொல்ல
இது போல பொழப்பு வாழும் விலங்குக்கு கூட இல்ல
மனுசங்கள மதிப்பவங்களா என்று மாறும் உலகம்
அந்த காத்திருப்பில் தானே எங்கள் ஒவ்வொரு நாளும் விடியும்