ஒரு போராளியின் காதலும் கண்ணீரும் கலந்த சரித்திரம்.... பாகம் -05
அப்பொழுது அங்கிருந்த ஒரு பெண் அவளின் தோளில் கை வைத்து,
"பயப்படாதே நாங்கள் உன்னை ஒன்றும் செய்ய மாட்டோம்......"
என்று அவளுக்கு ஆறுதல் வார்த்தைகள் கூறினாள். அதற்கு வினோ எந்த மறுவார்த்தையும் கூறாமல் அழுது கொண்டே இருந்தாள்.சிறிது நேரத்தில் பொழுது விடிந்தது.
கிழக்கு வானில் சூரியன் தன் அழகிய கதிர்களை பரப்பிய வண்ணம் காட்சியளித்தது.பறவைகள் இரை தேடி அங்கும் இங்குமாக பறந்தோடின. அப்போது தான் வாகனத்தை பார்த்தாள்.தன்னைப் போலவே பல சிறுவர்கள் அவ்வாகனத்திற்குள் இருந்தனர்.அவர்களைப் பார்த்த போது அவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தனர்.
ஆனால் வினோவால் அப்படி இருக்க முடியவில்லை.அவன் தங்கையை நினைக்கும் போது தங்கை தன்னுடன் இல்லாதது அவளுக்கு உலகமே இருளாக தெரிந்தது.
கடவுளே! என் தங்கை பாவம் எதுவுமே அறியாத சிறு பிள்ளை... என்று மனதில் நினைத்துக் கொண்டு அழுதாள்.தன் அத்தை அவளை என்ன செய்வாளோ? அடிப்பாளோ? இல்லை தன்னைப் போலவே யாருக்கும் கொடுத்து விடுவாளோ? என்று வருந்தினாள்.
"காட்டுக்குள்ளால வாகனம் போகுது" என்று மற்ற கூறி சிறுவர்கள் கூச்சலிட்டு சிரித்துக் கதைத்தபடியே வந்தனர். ஆம் வாகனம் காட்டின் வழியாகவே சென்று கொண்டிருந்தது. அப்பொழுது ஒரு பெண் அவர்களுக்கு பலகாரங்கள் கொடுத்தாள்.
அனைத்து சிறுவர்களும் அதை வாங்கி சாப்பிட்டார்கள் ஆனால் வினோ அதை வாங்க மறுத்து விட்டாள். அப்பெண்ணும் வினோவை விடுவதாக இல்லை பின்னர் அப்பெண்ணின் கட்டாயத்திற்காக இரு பலகாரங்களை வாங்கி உண்டாள்.சுவையான பலகாரம் தான். அதன் பெயர் பனங்காய் பலகாரம் என அப்பெண் கூறினாள்.இதற்கு முன் வினோ அப்பலகாரத்தை கண்ணால் கூட பார்த்திருக்கவில்லை.
சில மணிநேரங்களுக்கு பின்னர் சாப்பாட்டு நேரம் என்பதால் வாகனம் நிறுத்தப்பட்டது.அதுவும் விடுதலை போராளிகளின் இருப்பிடங்களில்..........
தொடரும்..........