சார்பானுக்கு பிறந்த நாள் வாழ்த்து

மலர்களால் நெய்யப்பட்ட சேலை கட்டி
புன்னகை தேச தோட்டத்தில் நான்
பறித்தெடுத்த ஒரு மலரின் பெயர் காதல்

---இது கவிப்பிரிய முகமது சர் ஃ பான் "எனதுநாளெல்லாம் நீ திங்கள்"
என்ற ப ஃ றொடை வெண்பாவில் கவிதை வரியில் பதிந்த கருத்து
இந்த அழகிய கற்பனை வரிகளை யாப்பின் எனக்குப் பிடித்த இரண்டு
பா வடிவங்களில் தந்திருக்கிறேன் .

மலர்களால் நெய்யப்பட் டசேலை கட்டி
புன்னகை தேசத் தோட்டத் தில்நான்
பறித்தெடுத்த ஒருமல ரின்பெயர் காதலே

---இது நிலை மண்டில ஆசிரியப்பா

மலர்களால் நெய்திட்ட நற்சேலை கட்டிநான்
புன்னகை தேசத்து தோட்டம் தனிலே
பறித்த மலரேகா தல்

---இது தூய சிந்தியல் வெண்பா
கவி துள்ளும் உள்ளத்துடன் பல்லாண்டு
வாழ்ந்திட நின் இனிய பிறந்த நாளில் வாழ்த்துகிறேன்
---கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (28-Aug-16, 9:08 am)
பார்வை : 122

மேலே