சார்பானின் கேள்வியும் என் பதிலும்
எனது புரட்சிக் கொடி செம் பா வில் சர்பான் கேள்வியும் என் பதிலும் ...
Mohamed Sarfan • 03-Feb-2016 1:38 pm
ஒரு அழகான பெண்ணும் நிலவும் சண்டை இட்டால் எவ்வாறு இருக்கும் என்று ஒரு புதுமையான கவி தர முடியுமா
Reply Vote Up Vote Down 1 வாக்குகள்
sankaran ayya • 03-Feb-2016 4:41 pm
அழகான பெண்ணுக்கும் நிலவுக்கும் உள்ள ஒற்றுமையைத்தான் சொல்வார்கள் கவிஞர்கள் . அவர்களை பூசலிடச்
சொல்லலாமா ?
மதியும் மடந்தை முகனும் அறியா
பதியிற் கலங்கிய மீன்
திங்களுக்கும் இவளுக்கும் வித்தியாசம் தெரியாமல் கலங்கித் திரிகின்றனவாம் விண்மீன்கள்
மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின்
பலர்காணத் தோன்றல் மதி
--விழியில் மலர் ஏந்தி நிற்கிறாள் . இவள் முகமொத்தவள் நீ
ஆயினும் பலர் காண வானத்தில் தோன்றாதே நிலா !
முகில் திரையில் போய் மறைந்து கொள்.
--வள்ளுவர் எப்படி சிண்டு முடிக்கிறார் பாருங்கள் .
நாமும் சிண்டு முடிவோம்
புன்னகையி லோர்புரட்சி பூவிதழி லோர்மலர்ச்சி
தேயும்நி லாதளர்ச்சி உனக்கு
புன்னகை இவள் செய்யும் புரட்சி. புரட்சியால் இவள் பூவிதழில் மீண்டும் மீண்டும் மறு மலர்ச்சி
நிலாவே தேய்ந்து தேய்ந்து உனக்கு தினம் தளர்ச்சி
குறட்பாவில் கடைசியில் தளை தட்டுகிறதே . காய் முன் நிரை சரியில்லை
புன்னகையி லோர்புரட்சி பூவிதழி லோர்மலர்ச்சி
தேயும் தளர்ச்சி உனக்கு
---நிலாவை எடுத்தால் எப்படி ? தேய்வது எதுவோ அது நிலா. understood சொல்லாமல் புரியும்
சிறப்பானா கேள்வி
மிக்க மகிழ்ச்சி நன்றி சர்பான் வாக்கு 1+++++++++
அன்புடன், கவின் சாரலன்