விடுதியில் நான் தனியாக
விடுதியில் நான் தனியாக
அரவணைக்க
அன்னை தந்தை இருந்தும்
அளவில்லா அன்பு என் மீது
அவர்கள் கொண்டிருந்தும்
அன்பு தூரத்தில் இருக்கின்ற வேளையில் நான்
அனாதையாகவே உணர்கிறேன் எனை
உண்டு உறைவிட பள்ளியில்
உடுத்த
உடை இருந்தும்
உடுத்திய என் உடையின்
அழகை காட்டி ஆனந்தம் கொள்ள
அன்னை தந்தை உறவில்லை
என் அருகில்
என கண்ணாடியின் முன் நின்று பார்க்கும்
என் கண்கள் கண்ணீர் சிந்துது கொஞ்சம்
அறுசுவை உணவிருந்தும்
அன்னை உன் கையால்
சமைத்து உண்ணாத இந்த உணவை
உண்ணும் என் நாவு
உப்பில்லா பண்டமாய்
உமிழ்கிறது குப்பையில் அம்மா
சுடும் என் உடல்
சுருண்டு கிடக்கின்றது அறையில்
ஆயிரம் மருந்துகள் எனை தேற்றினாலும்
அன்னை உன் மடியில் தலை சாய்த்து
உன் கையால் என் தலை முடியை
கோதும் அந்த கை மருந்தும்
இல்லாமல் மேலும் என் உடலும்
உள்ளமும் சுடுகின்றது அம்மா
கல்வியும் ஒழுக்கமும்
கற்று தந்து எனை உயர்த்தும்
இந்த விடுதி எனபோதும் நீங்கள்
இல்லா இந்த இடம் சிறையாகவே தெரிகிறது
எனக்கு அம்மா !