கஸல் கவிதைகள்
எல்லோருக்கும் சொல்லி மகிழ்கிறாய்
புத்தாண்டு வாழ்த்து. அந்த
எல்லோரும் சொல்லக் கூடாதோ
நமக்கான திருமண வாழ்த்து?
ஓட்டுப் போட்டத் துணியுடுத்தி நீதான்
தையல் நிலையம் போகிறாய்.
பட்டுத் துணியை வாங்காமலேயே ஏனோ
மையல் நிலையம் மூடுகிறாய்.
பழங்கால சினிமா கொட்டகை.
“கிழிந்த தாவணிக்குள் மானத்தோடு மனசு.”
யாரும் பார்க்காத குடும்பத் திரைப்படம்
இன்னும் டிக்கெட் கிடைக்கவில்லை எனக்கு .
விளக்கை அணைத்துவிட்டு
துயில்கொள்கிறேன் நோயில்
நிலவை அணைத்துக்கொண்டு
துயில்வதேப்போ பாயில்?.
*மெய்யன் நடராஜ்