சத்தமின்றி அழவைத்து

சத்தமின்றி
அழவைத்து
சுத்தமாக
என்னை
மறந்தவளே.....
சத்தியமாயும்
சத்தமாகவும்
சொல்வேன்......
சாகும்வரை
என்காதல்
நீதான்
என்று....!!

விழிமூடாமல்
விடிந்த
ஒவ்வோர் இரவும்
முடிந்தவரை
கண்ணீர்
மறைத்தே
நெஞ்சம்
வெடித்தேன்.....
கிடைக்கின்ற
நிமிஷங்களில்
எல்லாம்.....கவிதை
என்றுசொல்லி
தமிழ்
படித்தேன்......
எல்லாமே
காதலால்
என்று.....முடிவுரை
எழுதி......
அகம் மகிழ்ந்தேன்.....!!

ஒருமுறைதான்
பிறந்தேன்......
ஒவ்வொருமுறையும்
இறந்தேன்......
என்னிதயம்
நீயென்று நான்
எண்ணி.....வாழ்கையில்
என்னிதயம்
அறுத்துப்
போன.....கணம்
முதல்......!!

ஒளிவீசிய
இருகண்களில்......
இன்று ஏனோ
இருள்சூழ்ந்து
இதயம்
நொந்து
போனேன்.....இமயம்
கடந்து
நான்
போனாலும்......என்னிதயம்
கிடந்து
துடிக்கும்
உன்பெயரைச்
சொல்லிச் சொல்லி......!!!

என்னவள்
பெயர் சொல்லி......
என்ஜீவன்
சுவாசிக்கும்
ஒவ்வொரு
மூச்சிலும்
அவள் சுவாசம்
கலந்தே......
தீரும்......!!!!

எழுதியவர் : thampu (30-Aug-16, 1:52 am)
பார்வை : 158

மேலே