மொழி மாற்றம்
மொழி புரியாமல் நீ பேச
வழி தெரியாமல் நான் இருக்க
துடிக்கும் உன் இதயத்தின் மொழி அறிய – என்
சுவாசத்தை உனக்குள் பரிமாற்றம் செய்து
முத்தமழை பொழிந்து - உன்னை
எந்தன் மார்போடு அணைத்துக்கொண்டேன்
……… அந்த தருணம் ………
பேச வழி இல்லாமல் நின்று விட்டது – நம்
இதயம் சில நொடிகள் … அந்த சில நொடிகளில்
உன் இருளாக மொழிகளையும்
அறிந்தேன் அன்பே