வேட்கை
அன்பின் வேட்கை எம் தாயிற்கு வேண்டும் ;
பண்பின் வேட்கை எம் தந்தைக்கு வேண்டும் ;
உதவும் வேட்கை எம் நண்பனுக்கு வேண்டும் ;
காக்கும் வேட்கை எம் வீரனுக்கு வேண்டும் ;
தீர்க்கும் வேட்கை எம் மருத்துவருக்கு
வேண்டும் ;
பேசும் வேட்கை அனைவருக்கும் வேண்டும் ;
ஆளும் வேட்கை நல் மனிதர்க்கு வேண்டும் ....