உண்மை நட்பு

குட்டு வைத்திடும் தனிமையில்
திட்டித் தீர்த்திடும் தவறிழைத்தால்
தட்டிக் கொடுத்திடும் எல்லோர் முன்பும்
விட்டும் கொடுக்கும் உண்மை நட்பு

உதவி கேட்டிடும் முன்செய்திடும்
பதவி எதுவானாலும் உதவிடும்
சிகரம் தொட்டால் மனதால் வாழ்த்தும்
சிகரம் தொட்டிடச்சொல்லும் உண்மை நட்பு

நேர்வழி செல்ல அழைத்திடும்
குறுக்குவழி நோக்க கத்திடும்
இணைந்தே செல்ல ஊக்கம் கொடுக்கும்
கூடவே பயணிக்கும் உண்மை நட்பு

தெளிவான அறிவுரைகள் தந்திடும்
கூறும் அறிவுரைகள் ஏற்றிடும்
மாறும் உலகில் துளியும் மாறாது
நிறம் மாறாதவொன்றே உண்மை நட்பு

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (31-Aug-16, 7:08 am)
Tanglish : unmai natpu
பார்வை : 1603

மேலே