என் மன வானில்

பட்டாம் பூச்சி பறக்கிறதே
சிட்டுகள் சிறகை விரிக்கிறதே
மொட்டுகள் மலர்ந்து சிரிக்கிறதே
மெட்டுகள் தானாய் உதிக்கிறதே

சாரல் மனதை நனைக்கிறதே
தூறல் பூக்கள் உதிர்க்கிறதே
வானவில் மெல்ல நடனமாட‌
மின்னல் புகைப்படம் எடுக்கிறதே

பூக்களின் நறுமணம் பரவியதே
மனமெங்கும் வாசனை விரவியதே
எல்லா இனிமையும் ஒன்றாய்க்கூட‌
இதயம் மகிழ்ச்சியில் புரள்கிறதே

பனிமலை போன்றோரு சிலுசிலுப்பு
உள்ளுக்குள் மகிழ்ச்சியின் வரவேற்பு
இனியென வேறு எதிர்பார்ப்பு
கொளுத்துவேன் ஆயிரம் மத்தாப்பு

கிடைத்த மகிழ்ச்சிகள் உன்னாலே
உடலும் ஆடுது தன்னாலே
முன்னே நீவந்து நின்னாலே
மனசும் ஆகுது வான்போலே

நட்சத்திரங்களின் அணி வகுப்பு
பால்வெளியெங்கும் கம கமப்பு
மனதின் வாசம் எங்கும்பரவ
வாழ்வோ ஆனது முழுநிறைவு

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (31-Aug-16, 7:11 am)
Tanglish : en mana vaanil
பார்வை : 285

மேலே