நன்றி பாக்யா வார இதழ் அட்டைப்படத்திற்கு கவிதை கவிஞர் இரா இரவி

நன்றி . பாக்யா வார இதழ் !

அட்டைப்படத்திற்கு கவிதை ! கவிஞர் இரா .இரவி !

மனதில் இல்லை கவலை
முகத்தில் மலர்ந்தது மகிழ்ச்சி
அகத்தின் அழகு முகத்திலும் !

ஒரு தவளை சிறு இலைகள்
இரு மழலைகள் அருகே
புன்னகை அரசி !

குமரியின் வருகைக்காக
காத்திருந்த குழந்தைகள்
குதூகலம் அடைந்தன !

ஆபாசமில்லாத அழகிய ஆடை
அணிகலன் ஆகின்றது
பெண்களுக்கு !

புன்னகையை விட சிறந்தது
புன்னகை என்பது புரிந்ததால்
புரிகிறாள் புன்னகை !

கழுத்தில் தங்க நகை அணியாது
இதழில் புன்னகை அணிந்து
பூவாக மலர்த்திருக்கிறாள் பூவை !.

ஆடம்பரமில்லாத அழகு
அனைவருக்கும் பிடிக்கும்
அறிந்திருக்கிறாள் நங்கை !

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (31-Aug-16, 9:24 am)
பார்வை : 99

மேலே