காதலன் படப்பாடல் வடிவில்

-- காதலன்
பாடல் : என்னவளே
​-------------------------------​
​இதயமே என் இதயமே
தவிக்கின்றேன் நான் துடிக்​கின்றேன்
உந்தன் முகம் காணாமல் ...
தேடுகின்றேன் ராப்பகலாய்
தொலைத்திட்ட என் இதயத்தை ..
நான்தேடி தொலைதூரம் வந்தேனே .. ( இதயமே )

உந்தன் இதயமுடன் இணைந்ததோ
என் இதயமென நினைக்கின்றேன்
உந்தன் காதணி ஒலிகேட்டு நானும்
உன்னைத் தொடருகிறேன் ..
புரிந்துகொண்டேன் காதலின்
​வலியையும் நான் தானே ...
காலமும் கரையுதடி ..
உள்ளமும் உடைந்ததடி ..
நொடிகளும் யுகமாகுதடி
சொல்லடி நீயும் இருப்பிடத்தை .. ( இதயமே )

இழக்கின்றேன் என்னை அணுஅணுவாய்
இருப்பது ஒரு துளியே ..உந்தன்
முகம் காட்டு இல்லை இடம் கூறு ...
வந்திடுவேன் என் இதயத்தை
நான் காண ..உயிர்வாழ ..
வார்த்தைகளும் கிடைக்கவில்லை
உன்னை வசப்படுத்தி கவிப்பாட...
மூழ்கி விட்டேன் பலமுறையும்
மொழிக்கடலில் நானும்தான் ... ( இதயமே )

கண்டதும் உனை சிறைவைப்பேன்
எந்தன் இதயத்தில் நிரந்தரமாய்
பணி செய்வேன் கனியமுதே .. உன்
பசியாற்றி உறங்கச் செய்வேன்
நகப்பூச்சில் நான் கலந்து
​உந்தன் கைவிரலை அலங்கரிப்பேன் ​...
உன் பாத​ங்கள் தேயாதிருக்க
காலணியா​ய் காலமும் உடனிருப்பேன் ..
துயரின் நிழல்கூட உன்மீது விழாதிருக்க
குடையாய் துணை இருப்பேன் ...

​உன் சுவாசத்தை எழுத்தாக்கி
நான் வாசிப்பேன் கவியாக்கி ...( இதயம் )

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (31-Aug-16, 9:20 am)
பார்வை : 109

மேலே