ஆசை

வானம் தொட ஆசை தான்
வானவில் ஏணியாய் இருக்குமெனில்..
நிலவை பிடிக்க ஆசை தான்
விண்மீன்கள் துணை இருக்குமெனில்..
கடலில் குதிக்க ஆசை தான்
அலைகள் கரை சேர்க்குமெனில் ...
மரணம் தழுவ ஆசை தான்
கருவறை மீண்டும் கிடைக்குமெனில்...

எழுதியவர் : அருணா சுப்ரமணியன் (2-Sep-16, 6:34 am)
Tanglish : aasai
பார்வை : 95

மேலே