மனக்கதவினை ஓசையின்றி மெல்லத் திறந்தாள்

விழிஇமைக் கதவு மௌனமாய்
திறக்க
மனக்கதவினை ஓசையின்றித்
மெல்லத் திறந்தாள்
என்னை வரவேற்க !


விழிஇமைப் பூங்கதவு மௌனமாய் தாள்திறக்க
மென்மனப் பூங்கதவை மெல்லத் திறந்திடுவாள்
என்னை வரவேற்க வே

இன்னிமைப் பூங்கதவு மௌனமாய் தாள்திறக்க
மென்மனப் பூங்கதவை மெல்லத் திறந்திடுவாள்
என்னை வரவேற்க வே
----ஒரு விகற்பத்தில்

----கவின் சாரலன்

----புதுக் கவிதை வரிகள் சிந்தியல் வெண்பாவாக ..
தளை கருதி சில சொற்களை சேர்த்திருக்கிறேன் .
சிலவற்றை துறந்திருக்கிறேன் . இதனால் கவிதையின்
மெருகு எவ்வாறு கூடுகிறது என்பதை கவனிக்கவும்

எழுதியவர் : கவின் சாரலன் (2-Sep-16, 10:20 am)
பார்வை : 119

மேலே