கூட்டுக்குடும்பம்
கூட்டுக்குடும்பம்
&&&&&&&&&&&&&&&
மனசு விட்டு பேச
ஆள் இல்லா உலகில்
யாருக்கும் நேரமில்லா
உலகில்
யாருக்கும் மனசில்லா
நிலையில்
உயிர் எதிர் பார்த்து
ஏங்குவதெல்லாம்
உனக்காக நான் இருக்கிறேன்
என்ற ஒற்றை வார்த்தையும்
தோள் சரிந்து கொள்ள
உறவின் தோளும்
மடிசாய்த்துக் கொள்ள
மடியும்
அரவணைத்து
சோகம் என்றால் தடவி கொடுத்தும்
மகிழ்ச்சி என்றால் தட்டி கொடுக்கும்
உறவே...
இந்த உறவுகளோடு
உயிர் இருக்கும் வரை
சேர்ந்து வாழ்ந்து
உலகை அணு அணுவாய்
ரசிக்க வேண்டும்...
உன் (உயிரின்) மடியில் கடைசியாக கண் மூட வேண்டும்
விழித்தாலும்
உன் கண்ணிலே எழ வேண்டும்
உன்னை விட்டு
இரண்டடி
கூட தள்ளிப் போகமாட்டேன்
மகிழ்ச்சியிலும்
சோகத்திலும்
எல்லாவற்றிலும்
உன் உடன் தான்
இருப்பேன்
உன்னை நெஞ்சில் வைத்து தாங்குவேன்
மடியில் சுமப்பேன்
என் ஆசை எல்லாம்
உறவுகளோடு
நேரம் செலவிட்டு
அவர்கள் ஆசையை
அவர்களுக்கே தெரியாமல்
அறிந்து நிறைவேற்ற வேண்டும்
பிடித்த இடங்களுக்கு
நெஞ்சில் நிறைந்த
உறவுகளுடனும்
நண்பர்களுடனும்
பயணம் போய் வர வேண்டும்
பயணத்தில் இளையராஜா வேண்டும்
சன்னல் இருக்கை வேண்டும்
குளிர்ந்த காற்று வேண்டும்
தோழியின் தோளில் சாய்ந்து கொள்ள வேண்டும்
இப்படிபட்ட
உறவையும்
நட்பையும்
ஓர் நாள்
நிரந்தரமாக
முதலில் நானே
விட்டுப் பிரிய வேண்டும்
~ உங்கள் தோழி
தமிழச்சி பிரபாவதி வீரமுத்து