மண் வாசம்
மண்ணின் அதன் தனி மணம்
இன்று மண்ணில் அறவோடு
இல்லாமல் போய்விட்டதே ;
என்று செயற்கை உரமும்
ரசாயன பூச்சி கொல்லிகள்
உபயோகத்தில் வந்தனவோ
அன்று முதல் மண்
இயற்க்கை பொலிவும் வாசமும்
இழந்தே விட்டது
இன்று நம் மண்ணில் வாசம் இல்லை
அதில் விளையும் நெல் மற்றும்
காய் கனிகளில் ருசியும் இல்லை
மணமும் இல்லை மாறாக
யூரியா மணமே தூக்கி நிற்குது
பெரும் விளைச்சலும் லாபமும்
தேடி அலைந்திடும் இன்றைய
இளைய தலைமுறை விவசாயிகள்
மண்ணை தாயாய் மதிக்கவில்லையோ?
இல்லையேல் அவளுக்கு ஏன் இன்று
இந்த அவல நிலை ?
காலம் ஒரு ஓடும் சக்கரம்போல் என்பர்
காத்திருப்போம் அந்த நாளுக்காக
அன்று மண்ணைப் பூஜித்து
வளமான, வீட்டிலே செய்த உரத்தால்
மண்ணை வளம்படுத்தும் தலைமுறையினர்
வந்து உதிப்பர்
விவசாயம் செய்வர்
மண மணக்கும் நெல்
காய் கனிகள் பெருக்குவோம் பலனடைவோம்
மண்ணை மணக்க செய்து
உலகு இன்புற தாமும் இன்புறுவர் அவரே