அவசர அழைப்பு

அருண் என் பெயர், ஆனால் நண்பர்கள் என்னை "speed raja " என்று அழைப்பார்கள். இதற்கு காரணம் நான் இரண்டு சக்கர வாகனத்தை ஓட்டும் விதம் அப்படி. சாதாரண "Honda cup" மோட்டார் சைக்கிளில் கூட ஒரு அதி வேகம் இருக்கும் நான் ஓட்ட ஆரம்பித்தாள். என்னுடைய பொழுது போக்காக நண்பர்களுடன் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபடுவேன். அதிகாலை நேரம் தான் இதற்கு உகந்த நேரம். ஒரு மாதத்திற்கு முன்புதான் இத்தகைய பந்தயத்தில் ஈடுபட்டதால் 8 மணி நேரம் குறு சிறை வாசம் இருந்தேன். என் அப்பா 'உதவாக்கரை' என்று திட்டினார். மேலும் மூவாயிரம் வெள்ளி செலுத்தி வெளியில் எடுத்தார். நானும் அப்பா அம்மாவை கஷ்டப்படுத்திவிட்டேன் என்று மனம் வலித்தது.
இனிமேல் மோட்டார் பந்தயத்திற்கு முழுக்கு போட்டு விட வேண்டும் என்று எனக்குள் சபதம் எடுத்து கொண்டேன். அப்படி இப்படி என்று ஒரு மாதம் மோட்டார் பந்தயத்திற்கு செல்லாமல் என்னுடைய நண்பர்களிடம் நொண்டி சாக்கு சொல்லி நழுவி கொண்டிருந்தேன். அதிகாலை நேரம் என் அலைபேசி அலறியது, எடுத்து பேசினேன் என் மலாய் காதலி அலீனா பேசினாள். இப்பொழுதே நெடுஞ்சாலைக்கு வரும்படி கேட்டாள். வேறு வழியில்லாமல் வருவதற்கு சம்மதித்தேன். அங்கு சென்ற பின் தான் தெரிந்தது மோட்டார் பந்தயத்துக்கு அழைத்து இருக்கிறாள் என்று. அலீனா என் கைகளை பிடித்து கொண்டு இது என்னுடைய மான பிரச்சினை கண்டிப்பாக ஓடியாக வேண்டும் என்றால், உன்னை நம்பித்தான் என் தோழியிடம் "பெட்" கட்டி விட்டேன் என்றாள். வேறு வழியில்லாமல் சம்மதித்தேன்.
பந்தயம் முடிந்து வீடு திரும்புவதற்குல் விடிந்து விட்டது. அப்பாவும் அம்மாவும் எழுந்து விட்டிருப்பார்களோ என்று பயந்த வாறே வீட்டிற்குள் நுழைய வந்தேன். நிறைய பேர் இருந்தார்கள் என் வீட்டில், வெளியே தெண்டெல்லாம் போட்டு இருந்தார்கள். நமக்கு தெரியாமல் வீட்டில் என்ன விஷேசம் என்று ஆச்சர்யத்துடன் நெருங்கினேன். அப்பா ஒரு பக்கம் அழுது கொண்டிருந்தார். நடு வீட்டில் என்னை போல் ஓர் உருவம் பிண பெட்டிற்குல் வைத்திருந்தார்கள்.
என் அம்மா பெட்டியை பிடித்து இழுத்தவாறே அழுது கொண்டிருந்தார். அப்பொழுதுதான் தெரிந்தது நான் இறந்து விட்டேன் என்று. நான் மோட்டார் பந்தயம் ஓட்டும் பொழுது வேக கட்டுப்பாட்டை இழந்து மற்றோரு வாகனத்துடன் மோதி கொண்டு பலத்த காயத்துடன் இறந்திருக்கிறேன்.