வானமே வானமே
நீ நீரை இரைத்ததும்
பூமியெங்கும் வண்ண வண்ண
பூ முளைத்தது
நீ பனியை இரைத்ததும்
ஊரு எங்கும் சின்ன சின்ன
பவுர்ணமி ஒளித்தது
நீ தீயை இரைத்ததும்
உலகெங்கும் புது புது
உயிர்கள் உதித்தது
வானமே வானமே
இவையெல்லாம்
உன் தானமே தானமே!