இன்ப நதி

கண்களுக்கு புலப்படும்
கைகளுக்கெட்டா
நட்சத்திரமாய் நீ..
உன் இமை உயர்ந்தால்
என் தலை கவிழ்கிறது
எனை ஊமையாக்கும்
உன் இதழ் செழிப்போ
வற்றாத இன்ப நதி
இருந்தும்
உன் பார்வை பட்ட இதயத்தில்
விளைவது காதல் காதல்..

எழுதியவர் : மிதிலை ச ராமஜெயம் (4-Sep-16, 8:55 pm)
Tanglish : inba nathi
பார்வை : 110

மேலே