புவி வெப்பநிலை உயர்வு Global Warming

பூமியின் வெப்ப நிலை மாறுகிறதா?
பூமி முழுவதும் காலப் போக்கில் வெப்பநிலை அதிகரிப்பால் ஒரு வரண்ட கிரகமாகி மனித இனமும் தாவர இனமும்; மற்றும் உயிரனங்களும் மறைந்துவிடுமா?. இந்த ஆதங்கம் பல விஞ்ஞானிகளிடையே மட்டுமன்றி சாதாரண மக்களிடையேயும் தோன்றி உள்ளது. உதாரணத்துக்கு கனடாவில் டிசம்பர் முதற் கொண்டு மார்ச் மாதம் வரை பனிக்காலமாக கடும் குளிருடன் நிலவி வருவது யாவரும் அறிந்ததே. ஆனால் இந்த வருட பனிக்காலத்தின் போது பனி விழுவது மிகவும் குறைந்து வெப்ப நிலை அதிகரித்துள்ளதை நாம் அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. டிசம்பர் முதல் மாhச் மாதம் வரை பனிப்புயல் வீசி கனடாவின் பெரும் பகுதிகளில் வெப்ப நிலை சராசரி – 25 பாகை சென்டிகிரேட் வரை செல்வதுண்டு. இந்தச் சூழல் இந்த வருடம் வித்தியாசமாக இருக்கிறது. அதோடு மட்டுமன்றி புவியின் பெரும் பகுதிகளில் கத்தரினா (முயவயசiயெ) போன்ற சூறாவளிகள் தோன்றி மக்களுக்கு அழிவை ஏற்படுத்தியுள்ளது. மெக்சிக்கோ வளைகுடாவில் இவ்வருடம்; தோன்றிய சூறாவளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஐரோப்பிய நாடுகள் இதுவரை காணாதவாறு குளிரினால் தாக்கப்பட்டுள்ளது. இருவருடங்களுக்கு முன்னர், பிரான்ஸ் தேசத்தில் ஏறபட்ட அனல்காற்றினால் இறந்த முதியோhக்ளைப் பற்றி நாம் அறிந்தோம். புவியின் அதிக வெப்ப நிலை நிலவிய வருடங்களில 2005ம் ஆண்டும் 1998ம் ஆண்டும் முதலிடம் பெற்றுள்ளது. இனி வரப் போகும் ஆண்டுகள் இவற்றை முந்திவிடக்கூடிய சாத்தியக் கூறுகள் உண்டு. .இது போன்ற இயற்கையின் மாற்றங்களுக்குப் புவி வெப்ப நிலை உயர்வு காரணமா?

புவி; வெப்ப நிலை உயர்வு என்பது என்ன?
புவி வெப்ப நிலை உயர்வு என்பது காலப்போக்கில் புவியின் காற்றுமண்டலம் மற்றும் கடல்களின் சராசரி வெப்பநிலை அதிகரிக்கும் நிகழ்வைக் குறிக்கும் வார்த்தையாகும். பெரும்பாலும் மனிதர்களின் செயற்பாடுகளினால், மோட்டார் வாகனங்களைப் கூடுதலாக பாவித்து எரிப்பொருள்களில் இருந்து அதிகளவு வாயுக்களை வளிமண்டலத்துக்குள் வெளியேற்றப்படுவதினாலும், தொழிற்சாலைகள் உற்பத்தியைப் பெருக்க வேண்டும் என்ற நோக்குடன் வளிமண்டலத்தை அசுத்தப்படுத்தும் வாயுக்களை வெளியேற்றுவதினாலும் வெப்ப நிலை அதிகரிக்க ஏதுவாகிறது. கடந்த நூற்றாண்டின் இறுதியிலிருந்து தற்போதைய காலம் வரை புவியின் சராசரி வெப்பநிலை 0.6 +/- 0.2 சென்டிகிரேட் பாகை வரை கூடுதலாகியிருக்கிறது எனக் கணக்கிடப்பட்டுள்ளது. பூமியானது சூரிய மண்டலத்தில் குடும்பத்தில் உயிர்கள் வாழும் ஒரே கோளாகும். நமக்கு இறைவன் தந்த இக்கோளினை சுயநலம் கருதாது பாதுகாத்து வரவேண்டியது எமது தலையாய கடமையாகும்.

பசுமை இல்ல வாயுக்கள் ( Green House Gases)
சூரியனில் இருந்து பூமியை நோக்கி வரும்; கதிர்வீச்சானது புவியின் வளிமண்டலத்தை அடைந்து, அதன் பெரும் பகுதி தெறித்து பெரும்பகுதி திரும்பவும் வான்வெளிக்குச் செல்கிறது. அதன் சிறு பகுதி பூமியை வந்தடைகிறது. வளிமண்டலமானது பல வாயுக்களை உள்ளடக்கியுள்ளது. இவை “பசுமை இல்ல வாயுக்கள்” (( Green House Gases) என அழைக்கப்படும். நீராவி ( Water Vapour), கரியமலவாயு (Carbondioxide), மீதேன் வாயு ( Methane Gas) , நைட்ரஸ் ஒக்சைட் ( Nitrous Oxide) , ஒசூன் ( OZONE) , குளோரோபுளோராகார்பன் ( Chloroflurocrabon) போன்றவையாம். இவையெல்லாம் இயற்கையில் தோன்றும் வாயுக்களானாலும் மனிதர்களால் உருவாக்கப்படும் வாயுக்களாகத்; தோன்றி வளிமண்டலத்தை அடைகின்றன. வளிமண்டலத்தில் உள்ள ஓசூன் (Ozone) படலம் அதிக சக்திவாய்ந்த, குறைந்து அலை நீளம் உள்ள புறஊதாக் கதிர்கள் ( Ultra Violet Rays) சூரியனில் இருந்து பூமியை வந்தடையாமல் தடுக்கிறது. இந்த படலத்தில் ஓட்டை ஏற்பட்டால் ஆபத்தான இக்கதிர்கள் பூமியை அடைந்து தோல் சம்பந்தப்பட்ட புற்று நோய்களை உருவாக்க ஏதுவாகிறது.

உலகத்தின வட துருவத்தில இருந்து தென் துருவும் வரை உள்ள நிலப்பரப்பினதும் நீர் பரப்பினதும் வெப்ப நிலை மிகவும் குளிரான நிலையில இருந்து படிப்படியாகக் கூடி மத்தியரேகை பகுதியில் உள்ள நாடுகளில் நடுத்தர வெப்பநிலையடைந்து பின்னர் படிப்படியாகக் குறைந்து மிகவும் குளிர்ந்த வெப்பநிலையைடைகிறது. பூமி முழுவதும் ஒரு சீரான வெப்பநிலையாக இல்லாமைக்கு காரணம் என்ன?. அதன் சுழற்சியும், கோள அமைப்பும். பருவ மாற்றமும் காரணமாகிறது. 2005ம் ஆண்டு உலகின் வெப்பநிலை அதிகரித்து காணப்பட்ட வருடமாக கணிக்கப்பட்டுள்ளது. 2002ம் ஆண்டில் இருந்து வெப்நிலை படிப்படியாக அதிகரித்துவருகிறது என்பது விஞ்ஞானிகளின் கூற்று. இது தொடர்ந்து நடைபெறுமாகில் இன்னும் சில நூற்றாண்டுகளில் பூமி பாலைவனமாகிவிடுமா?. அதோடு மட்டுமல்ல வட, தென் துருவங்களில் உள்ள பனி மலைகள் உருகுவதினால் சமுத்திரங்களின் நீர் மட்டம் உயர்ந்து பல தீவுகளும், கரையோரப்பகுதிகளும் காலப்போக்கில் கடலுக்குள் மூழ்கிவிடலாம். அது நடப்பின் மாலைதீவு, இலங்கை, யாழ் குடாநாட்டைச் சுற்றியுள்ள சிறு தீவுகளின் கதி என்ன?.

புவியின் சராசரி வெப்ப நிலை ஒருகாலத்தில ஆகக் கூடிய வெப்ப நிலை 27 பாகை சென்டிகிரேட்டாகவும், மிகவும் குறைந்த வெப்ப நலை 12 பாகை சென்டிகிரேட்டாகவும் இருந்தது. ஆனால் தற்போது புவியின் சராசரி வெப்ப நிலை 15 சென்டிகிரேட்டாகும். புவியின் வெப்ப நிலை மாறாமல் சீராக இருப்பின் உயிரினங்கள் வாழ பெரும் உதவியாக இருக்கிறது. பல உயிரினங்கள், தாவரங்கள் தமது உடலை வெப்ப நிலைக்கு ஏற்றவாறு அமைத்து வாழகின்றன. குளிர் பிரதேசங்களில் வாழும் உயிரினங்களும் தாவரங்களும் சூடான பிரதேசங்களில் வாழ முடியாது இறந்து போகின்றன. ஏன் மனிதன் கூட சராசரி 30 பாகை செண்டிகிரேட் வெப்ப நிலையுள்ள இலங்கைத் தீவு அல்லது தமிழ்நாட்டிலிருந்து மிகவும் குளிர்ந்த நாடான கனடாவுக்கு பனிகாலத்தில் புலம் பெயர்ந்து வியாதிகளால் கஷ்டப் படுவது உண்டு.

“பசுமை இல்லத் தாக்கம்” ( Green House Effect)
இந்த சீரான வெப்ப நிலையை பூமியில் ஏற்படுத்திக் கொடுக்கிறது. பூமியை வந்தடையும் சூரியனின் கதிர் வீச்சு அதிகரித்தால் வெப்பநிலை அதிகரிக்கும் என்பதில் சந்தேகம். இதனை கட்டுபடுத்துவது பசுமை இல்லத் தாக்க விளைவாகும் வளிமண்டலத்தில் பசுமை இல்ல வாயுக்களின் அடர்த்தி 1800ம் ஆண்டிலிருந்து 30 விகிதம் அதிகரித்துள்ளாக விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். இவ்வாயுக்களின் அதிகரிப்பு பூமியின் வெப்ப நிலை அதிகரிக்க ஏதுவாகிறது. வெப்பநிலைபற்றிய பதிவுகள் 19ம் நூற்றாண்டிலிருந்து இருந்து வருகிறது. அதனால் 19ம் நூற்றாண்டிலிருந்து 20ம் நூற்றாண்டுவரை பூமியின் சராசரிவெப்ப நிலை 0.6 செண்டிகிரேட் பாகையாக உயர்ந்துள்ளது. கடல் மட்டங்கள் 10 முதல் 20 செமீ வரை உயர்ந்துள்ளது. இது கடல் நீர்; வெப்பத்தினால் விரிவடைந்ததினால் ஏற்பட்டிருக்கலாம். அதோடு மட்டுமல்ல வட, தென் துருவங்களில் உள்ள பனிமலைகள் உருகியதனால், அப்பகுதிகளில் உள்ள பனிமலைகளின் தடிப்பு 40 விகிதம் குறைந்து கடல் நீரின் மட்டத்தை அதிகரிக் செய்திருக்கிறது. இந்த தீய வாயுக்கள் தொடர்ந்து வளிமண்டலத்தை கட்டுப்பாடில்லாமல் அடையுமாகில் 2100ம் ஆண்டளவில் பூமியின் சராசரி வெப்ப நிலை 1.4 முதல் 5.8 பாகை சென்டிகிரேட் வரை உயரலாம் என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். இதனால் பூமியில் அனல் காற்று, வரட்சி, காட்டுத் தீ, சூறாவளி, வெள்ளப் பெருக்கு போன்றவற்றை எதிர்பார்க்கலாம். இவை பூமியில் இடத்துக்கு இடம் மாறுபட்டு இவை தோன்றும் உதாரணத்துக்கு சூறாவளிகள் தோன்றும் மெக்சிக்கோ வளைகுடாவில் அடிக்கடி இவை தோன்றலாம். இது போல் ஆபிரி;க்கா, லத்தீன் அமெரிக்கா, இந்தியா, மத்திய ஆசியா போன்ற நாடுகளின் நடுப்பகுதிப் பிரதேசங்களில் வரட்சி நிலை அதிகரிக்கலாம். இவைற்றினால் நன்னீர் பஞ்சம் , உணவுப் பஞ்சம், தொற்று வியாதிகள் தோன்றலாம். தாவரங்களும் பல மிருக இனங்களும் பருவமாற்ற்த்துக்கு ஈடு கொடுக்க முடியாது அழிந்து போகலாம்.

கியாட்டோ விதிமுறை ( Kyoto Protocol)
கியோட்டோ விதிமுறை 1997ம் ஆண்டு உருவாக்கப்பட்ட சர்வதேச உடன்பாடு. ஐ.நா சபையின் பல அங்கத்துவ நாடுகளினால் கியோட்டோ (Kyoto) என்ற ஜப்பானிய நகரில் விவாதத்திக்கப்பட்டு சில தீhமானங்கள் எடுக்கபட்டது, தொழிற்சாலைகளை நம்பி தமது பொருளாதாரம் வளர வாழும் நாடுகள் எல்லாம் ஒன்று சேர்ந்து 1990ம் ஆண்டில் இருந்த பச்சை இல்ல வாயுக்களின் வெளியேற்றத்திலும் பார்க்க 2008ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டுக்குள் 5 விகிதம் இவ்வாயுக்களின் வெளியேற்றத்தை குறைப்பதென தீர்மானித்தன. “செய் அல்லது செத்து மடி” என்ற நிலை இந்த நாடுகளுக்கு. ஐரோப்பிய நாடுகள் 8 விகிதமும் , ஜப்பான்; 5 விகிதமும் குறைப்பதற்கு உடன் பட்டன. அமெரிக்கா தனது பொருளாதாரம் பாதிப்படையும் என்று உடன் படிக்கையில இருந்து ஒதுங்கிக் கொண்டது. இவ்வாயுக்களை அதிகளவு தொழிற்சாலைகள் மூலம் வெளியேற்றும் இந்தியாவும் சீனாவும் உடன்படிக்கைக்கு ஆதரவு தெரிவித்தன. தொழிற்சாலைகளின் உற்பத்தியைக் மனதில் கொண்டும், நாட்டின் பொருளாதாரத்தின் வளர்;ச்சியின் அடிப்படையில் கனடாவைப் பொருத்தமட்டில் உடன்பாட்டுடன ஒத்துப்போவதா இல்லையா என்பதை தற்பொது பதவி ஏற்றிருக்கும் கொன்சவெட்டிவ் கட்சி தீர்மானிக்கவேண்டும்;. அமெரிக்கா போகும் வழியையே கனடாவும் பின்பற்றலாம். கடந்த தேர்தலின் போது பதவிக்கு வந்த கொன்சவெட்டிவ் கட்சி கியோட்டோ உடன்பாட்டைப் பற்றி மௌனம் சாதித்தது. 2008ம் ஆண்டு பெப்ரவரி 16ம் திகதி வரை தீhமானிக்க அதற்கு காலவரை உண்டு. அமெரிக்காவுடன் சேர்ந்து கனடா உடனபாட்டுக்கு ஆதரவு தராவிட்டால் இனியும் பருவகாலம் சம்பந்தப்பட்ட சர்வதேச கூட்டங்களில் பங்கு கொள்ளமுடியாது நிலை ஏற்டபடலாம். மற்றைய நாடுகள் கனடா மேல் வைத்திருக்கும் மதிப்பும் குறையலாம்.

தொழிற்சாலைகளின் உற்பத்தி கட்டுப்படுத்துவதினால் தமது நாட்டின பொருளாதாரம் பாதிப்படையலாம்,; , நாட்டில் வேலையில்லாமை அதிகரிக்கலாம் எனப் பெரிய நாடுகள் அரசியல் ரீதியாக விவாதித்தார்கள். ஆனால் ஒரு நாட்டின் பொருளாதாரம் வளர உற்பத்தி அவசியமானாலும் இதை செயல்படுத்த தேகநலம் பாதிக்கப்படாத மனித வளம் அவசியம் என்பதை அவர்கள் உணரத் தவறிவிட்டார்கள். வெப்ப நிலை அதிகரிப்பு தேகநலத்தை வெகுவாக பாதிக்கும் என்பதை நுணுக்கமாக அவர்கள் ஆராயவில்லை. தீய வாயுக்களின் உற்பத்தி, வெப்ப நிலை அதிகரிப்பு, தேகநிலை பாதிப்பு, பொருளாதார வளர்ச்சி இவையெல்லாம் ஒரு சுழற்சியில் இயங்குகிறது. இதனால் உற்பத்திக்கு தீய வாயுக்களை வளிமண்டலத்துக்குள் வெளியேற்றாத சக்தி முறைகளைப் பாவிக்க வேண்டும் என்பதை பல நாடுகள் முன்வைத்தனர். பயங்கரவாதம் , எயிட்ஸ நோய் , புற்று நோய் போன்ற முக்கிய பிரச்சனைகள் இருக்கும் போது வளிமண்டலத்தில் தீய வாயுக்களின் அடர்த்தியைக் கட்டுப்படுத்தும் பிரச்சனை முக்கியமானதா என்ற கருத்தையும் சில நாடுகள் முன் வைத்;தன. பூமியில் எல்லாப் பிரச்சனைகளையும் தோற்றுவிப்பதற்கு மனிதர்களே காரணம். சூழலுக்கு மதிப்பு கொடுப்பதில்லை. காடுகள் அழிக்கப்படுகின்றன. ஓடும் நதிகள் கட்டுப்படுத்தப்படுகின்றன. கடற்கரையோரங்களில் உல்லாசப் பயணிகளுக்கு விடுதிகள் கட்ட மரங்கள் தறிக்கப்படுகின்றன. சேது சமுத்திரம் குடையப் படுகிறது. அதனால் சுனாமியினால ஏற்பட்ட பாதிப்பை நாம் கண்டோம். எது உலகுக்கு முக்கியம் என்பதில்லை. வெப்பநிலை அதிகரிக்கிறது என்ற சூழல் சம்பந்தப்பட்ட பிரச்சனை முழு உலகத்தையும் பாதிக்கிறது. பயங்கரவாதம் ஒரு குறிப்பிட்ட நாடுகளை அந்நாட்டின் அரசியற் போக்கினால் பாதிக்கிறது. ஒரு சில ஆண்டுகளில் அது பெரும் பாதிப்பை ஏற்படுத்தாவிட்டாலும் அதனால் ஏற்படும் அழிவுகள் கணக்கில் அடங்கா. ஆரம்பத்தில் கட்டுப் படுத்தாவிட்டால் பின்னர் அதனையிட்டு வருந்த வேண்டிய நிலை வரலாம்.

வட தென் துருவ பனி மலைகளின் நிலை
பூமியின் வட தென் துருவங்களில் உள்ள பகுதி உறைந்த நீரினால் உருவாக்கப்பட்டது. ஒவ்வொரு வசந்த காலத்திலும் இவ்வுறைந்த நீர்; உருகி மிதக்கும் பனிக்கட்டிகளின் தடிப்பு குறைகிறது. குளிர்காலங்களில் அவை திரும்பவும் உறைந்து தடிப்பு கூடுகிறது. இந்த மாற்றத்தை வருடாவருடம் அவதானித்து வரும் அமெரிக்க நிலையம், இந்த மாற்றத்தில் ஏற்படும்; விகிதத்தை கணித்துள்ளது. பனிக்கட்டிகளால் சூழப்பட்ட கடற்பகுதி இரு துருவங்களிலும் படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த தசாப்தத்தில் 8 விகிதம் பனிக்கட்டிகள் மறைந்துள்ளன. இன்னும் 60 ஆண்டுகளில் வசந்த காலத்தில் உருகுவதற்கு அப்பகுதிகளில் பனிக்கட்டிகள் இருக்கமாட்டா. இவை உருகுவதினால் சமுத்திரங்களின் மட்டம்; 7 மீட்டர் உயரும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. வட துருவத்திற்கு அருகே உள்ள கீரின்லாந்து, ஐஸ்லாண்ட், அலாஸ்கா, சைபீரியா போன்ற நாடுகள் வெப்பநிலை அதிகரிப்பால் ஏற்படும் தாக்கத்தை உணர முடிகிறது. இங்கு வாழும் மக்கள் தமது வாழ்க்கை முறையையும் உண்ணும் உணவையும் செய்யும் தொழிலையும் மாற்றி அமைக்க வேண்டிய நிலை ஏற்படும். அங்கு வாழும் பென்குவின், சீல் போன்றவற்றின் கதி என்னவாகும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். உறைந்த கடல் திறந்த கடலாக மாறுவதால் பயணம் செய்வது இலகுவாகி புதிய தொழில் வாயப்புகள் உருவாக வாய்ப்புண்டு. கடற் பயணம் இலகுவாகிறது. பனிமலைகள் தம்மேல் விழும் சூரிய கதிர்களைத் தெறிக்கச் செய்கின்றன. கடல் நீர் அவற்றை உறிஞ்சி எடுக்கின்றன. இதனால் பூமியில் இயற்கையாக நிலவும் வெப்பத்தின் சமநிலை பாதிப்படைகிறது. சமுத்திரத்தின் மேற்பகுதியில் உள்ள வெப்ப நீர் ஒரு பகுதியில் இருந்து இன்னொரு பகுதிக்கு கொண்டு செல்லும் பட்டையாக ( ஊழnஎநலழச டீநடவ) இயங்குகிறது. சமுத்திரத்தின் அடியில் உள்ள குளிர்ந்த நீர் எதிர் திசையில் அட்லாண்டிக் சமுத்திரத்தில் எடுத்துச் செல்லப் படுவதினால் வருங்காலத்தில்; ஐரோப்பாவில் இதுவரை இருந்த பருவநிலையில் மாற்றம் ஏற்பட்டு இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளில் அதிகளவு பனிமழை பெய்யவாய்ப்புண்டாம். இது இவ்வாறு இருக்க இமயமலை, அல்ப்ஸ் போன்ற மலைப் பகுதிகளில் இருக்கும் பனிக்கட்டிகளின் கதை என்ன? அவையும் உருகத் தொடங்கினால் மின் சக்த்pயை உற்பத்தி செய்யவும் குடி நீருக்காகவும் அப்பனிகட்டிகளை நம்பி வாழும் நாடுகளின் கதி அதோ கதி தான். அதோடு மட்டுமல்ல நதிகள் , ஏரிகள் பெருக்கெடுத்து அழிவுகளை உண்டாக்கலாம்.
சமுத்திரங்களின் வெப்ப நிலை
பூமியின் நீர்ப் பரப்பில் 97 விகிதம் கடல் நீராகும். சமுத்திரம் சராசரி 13,000 அடிகள் ஆழம் உள்ளது;. 1955ம் ஆண்டு முதல் 1998ம் ஆண்டு வரை சமுத்திரத்தின் மேற்பகுதியில உள்ள நீரானது 0.037 பாகை சென்டிகிரேட்டாக உயர்ந்துள்ளது. சமுத்திரங்கள் பூமியின் பெரும் பகுதி வெப்பத்தை ஏற்றுக்கொள்கின்றன. இச்சமுத்திரங்கள் உள்ளடக்கி உள்ள வெப்பத்தின் சிறுபகுதியை மட்டும் அவை வெளியேற்றின் உலகில் உள்ள பனிமலைகளும் துருவஙகளில் உள்ள உறைந்த பகுதிகளும் உருகிவிடும். பூமியை அடையும் வெப்பத்தில 14.5 ஒ 1023 ஜுல்கள் சமுத்திரததையும், 0.9 ஒ 1023 ஜுல்கள் கண்டங்களில் உள்ள நிலத்தையும் , 0இ7 ஒ 1023 ஜுல்கள் வளிமண்டலத்தையும் அடைகிறது. சமுத்திரத்தில் உள்ள வெப்ப நிலை 0.1 பாகை செண்டிகிரேட்டாக உயர்ந்து அவ்வெப்பம் உடனடியாக வளி மண்டலத்துக்கு மாறினால் வளிமண்டலத்தின் வெப்ப நிலை 100 பாகை சென்டிகிரேட்டாக உயரக் கூடிய சாத்தியக் கூறுகளுண்டு. வளிமண்டலத்தில் உள்ள கரியமலவாயுவின் அடாத்தி தற்போது இருக்கும் நிலையில இருந்து மாறாது இருப்பினும் சமுத்திரத்தில் இருந்து வெளியேறும் வெப்பம் இன்னும் ஒரு தசாப்தத்தில 0.5 பாகை செண்டிகிரேட்டாக பூமியின் வெப்ப நிலையை உயரவைக்கும் வாய்ப்புண்டு.

எல் நினோ ( El Nino)
“எல் நினோ” எனப்படும் பசுபிக் சமுத்திர விளைவு பூமியின் வெப்ப நிலை அதிகரிப்பதால் ஏற்படுவதில்லை. எல் நினோ ( Elnino ) என்ற நிலை இயற்கiயில் பசுபிக் சமத்திரத்தின் மத்திய கிழக்கு பகுதியில் ஏற்படும் சராசரி வெப்ப நிலைக்குப் பார்க்க உயர்வாக நிலவும் ஒரு நிலையாகும். இந்த எல் நினோ நிலை புவியின் பெரும் பகுதிகளின் பருவகாலத்தை நிர்ணயிக்கிறது. பல ஆண்டுகளாக இந்த நிலை இருந்து வருகிறது. சமுத்திரத்தின் மேல் மட்டத்தில உள்ள நீரின் வெப்பம் உயரும் போது இந்நிலை தோன்றுகிறது. கடந்த தசாபத்ங்களில் இந்நிலை அடிக்கடி தோன்றியுள்ளது.

பூமியின் வெப்ப நிலை உயராது இருக்க ஏது செய்லாம்.?
மனிதன் தனது நலத்திற்காக உருவாக்கிய பிரச்சனைக்கு முடிவு காண அவனால்தான் முடியும். முதலாவது இயற்கையையும் சூழலையும் மதிக்க கற்றுக் கொள்ளவேண்டும. இயற்கையே இறைவன். பல வித சக்திகளை உற்பத்தி செய்ய புதிய வழிமுறைகள உண்டு;. காற்று , நீர். கடல் அலை, கழிவுபோருட்கள், இவை மூலம் சக்தியை உருவாக்குவதினால் தீய வாயுக்;கள் உற்பத்தியாகாமல் குறைக்கலாம். காடுகள் பாதுகாக்கப்பட வேண்டும். மின்சாரத்தை வெகு குறைந்தளவு பாவிக்கப் பழக வேண்டும். எரிபொருள்களை வளிமண்டலத்தில வெளியேற்றும் பெற்றோலில் இயங்கும் வாகனங்களின் பாவனைகளை குறைத்துக் கொள்வதினால் தீய வாயுக்கள் வெளியேறுவதை குறைக்கலாம். வீடுகளை நல்ல முறையில் வெப்பம் வெளியேறாமலும் குளிர் உட்புகாமலும் இருக்க காத்திடவேண்டும். பொதுவாக வாழக்கையில் பாவிக்கும் குளிர் ஊட்டும், உணவு தயாரிக்கும் சாதனங்கள் போன்றவை கூட வாயுக்களை வெளியேற்றுகின்றன. ஒரு காலத்தில் மின்சாரம், மோட்டார் வாகனம், குளிர்ப்பெட்டி போன்றவை இல்லாமல் வாழ்ந்த மனித இனம், விஞ்ஞானம் அவைகளை உற்பத்தி செய்து சௌகரியமாக வாழ வசதிசெய்து கொடுத்துள்ளது. அதோடு சோம்பேறித் தனத்தையும் அந்தஸ்த்து என்றால் என்ன என்பதையும் பணத்தை எவ்வாறு விரையம் செய்ய வேண்டும் என்பதையும் கற்றுக் கொடுத்துள்ளது. முக்கியமாக பூமியின் ஆயுளையும் குறைக்க வழிவகுத்துள்ளது.

பூமியின் வெப்ப நிலை அதிகரிப்பினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது மனித இனத்தின் பொறுப்பு. இதை உதாசீனம் செய்தால் அதனால் பாதிக்கப்படுவது வருங்கால இளம் சமுதாயம் என்பதை நாம் மறக்கக் கூடாது.

********

எழுதியவர் : பொன் குலேநதிரன் – கனடா (6-Sep-16, 5:03 am)
பார்வை : 1594

மேலே