விதைவைகளின் marumanam
என் எண்ணத்தை வெளிப்படுத்தும் முன்பு ஒரு பொதுவான கருத்தை பதிவு செய்ய விரும்புகிறேன் : எந்த ஒரு விஷயமுமே நாம் பார்க்கின்ற பார்வையில் தான் அது நல்ல/கெட்ட விதமாக தோன்றுகிறது,அதுபோல விதவைகளோ, அனாதைகளோ தானாக பிறப்பித்திலை விதி வசமே தங்கள் வாழ்க்கை மாறி விடுகிறதே தவிர அது யாருடைய தனிப்பட்ட தவரும் கிடையாது .
என் வீடு அருகில் நடந்த சம்பவம் இது:இருவருக்கும் திருமணம் முடிந்து கிட்டத்தட்ட எட்டு வருடங்கள் கடந்து விட்டன,ஒருவர் மேல் ஒருவர் அளவு கடந்த அன்பு வைத்திருந்தினர் இருப்பினும் ஒரே ஒரு குறை என்று அடுத்தவர்கள் பேசும் படி அவர்கள் வாழ்வில் அமைந்தது குழந்தையின்மை,அப்படி இருந்தும் அவர்கள் அதை ஒரு மிக பெரிய பொருட்டாக கருதவில்லை ஒருவருக்கொருவர் குளந்தை போல பார்த்துக்கொண்டார்கள் ....ஒரு நாள் எப்பொழுதும் போல வேலைக்கு சென்ற தன் கணவர் விபத்தில் சிக்கிக்கொண்டார் என கேட்டதும் தன் காதுகளில் யாரோ அமிலத்தை கொட்டியதை போல உணர்ந்தாள் அடித்து,புடித்து மருத்துவமனைக்கு சென்றால் கணவனை சடலமாகத்தான் பார்க்க நேர்ந்தது.விதவையாக வேண்டிய வயதா ?என குழந்தையின்மையை ஒரு குரையாக பேசிய அதே வாய்கள் இப்போது அதே வாயால் பரிதாபப்பட்டது,பாவம் அவர்களால் வேறென்ன செய்ய முடியும்...இப்போது பிறந்த/புகுந்த வீட்டிலும் தாழ்வுமனப்பான்மையோடு வாழ்ந்து வருகிறார்,
எனது கருத்து அவர் தாராளமாக நல்ல உள்ளம் படைத்த ஒருவரை மறுமணம் செய்து கொள்வதில் எந்த தவறான செயலும் இல்லை என்று தோன்றுகிறது ..
நன்றி
என் வார்த்தைகளோ,கருத்துகளோ யார் மனதையாவுது புண்படுத்தும்படி இருந்தால் நான் மனதார மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்..
இதயத்தின் எண்ணத்தை பதிவு செய்யும்,
ரோகினி கார்த்திக்