பதட்டமாய் தாய்ப்பறவை

வேடனைக் கண்டாயா
அவன் கையில் அம்பினைக் கண்டாயா
நமைக் கொல்லும் மிருகத்தைக் கண்டாயா
ஊறும் பாம்பினைக் கண்டாயா
அடித்து ஊற்றத் துடிக்கும் மழையினைக் கண்டாயா
இல்லை ஆட்டுவிக்கும் புயலினைக் கண்டாயா..
இத்தனை பதட்டத்தில் ஏனம்மா
.....
.....
அதெல்லாம் இல்லையடி செல்லங்களே..
கோடாலியோடு ஒரு மனிதனைக் கண்டேன்...