ஓர் இனிய மாலை பொழுது

சில்லென்ற காற்று
சின்னதாய் சாரல்..
சாய்ந்தாடும் மரம்
சுகமான சுவாசம்
இது போதும் எனக்கு
வேறென்ன வேண்டும்
ஓர் இனிய மாலை பொழுதிற்கு...


கூவிடும் குயில்கள்
ஆடிடும் மயில்கள்
பேசிடும் கிளிகள்
இப்படி எதுவுமே
இல்லை அருகில் ..
இருந்தும் இட்டு சென்றாய்
ஓர் இன்ப மயமான உலகிற்கு ...


அந்தி சாயும்
அழகொன்றே போதும்
அன்னை உன்
அருள் சொல்ல...
ஆயிரம் கண் போதாது
அம்மா உன்
அழகனைத்தும்
அள்ளிக் கொள்ள...

இருந்தும்,
அள்ளி அள்ளி
திண்ணுகிறேன் ....
அளவொன்றும்
இல்லாமல்
சீனி மிட்டாய் கண்ட
சிறு பிள்ளை போல...

எழுதியவர் : அருணா சுப்ரமணியன் (8-Sep-16, 8:14 am)
பார்வை : 2222

மேலே